Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு திட்டம் மக்களிடையே மிக பிரபலமாக உள்ள திட்டமாகும். இதில் பெரும்பாலும் சீனியர் சிட்டிசன்கள் எனப்படும் மூத்தக் குடிமக்கள் முதலீடு செய்கின்றனர்.
Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு திட்டம் மக்களிடையே மிக பிரபலமாக உள்ள திட்டமாகும். இதில் பெரும்பாலும் சீனியர் சிட்டிசன்கள் எனப்படும் மூத்தக் குடிமக்கள் முதலீடு செய்கின்றனர்.
Published on: June 28, 2025 at 7:00 am
Updated on: June 27, 2025 at 9:45 pm
சென்னை, ஜூன் 27 2025: கடந்த சில ஆண்டுகளில், அதிக பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை இறுக்கமாக வைத்திருந்தது. இதனால், நாட்டில் கடன்கள் மற்றும் வைப்புத் தொகைகளுக்கான வங்கி வட்டி விகிதங்கள் மிக அதிகமாகவே இருந்தன. இது ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாய் அளித்தது. குறிப்பாக, மூத்தக் குடிமக்கள் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்து நல்ல ரிட்டன் பெற்றார்கள்.
இந்த நிலையில், கடந்த 5 மாதங்களில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் (bps) வரை குறைத்துள்ளது. இதனால், தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆகக் குறைந்துள்ளது.
இதில் ரெப்போ விகிதம் என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெறும் விகிதமாகும். இந்த விகிதம் குறையும் போது, வங்கிகளும் கடன்கள் மற்றும் வைப்புத்தொகைகள் இரண்டிற்கும் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்குகின்றன.
இதனால் வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட முதலீடுகளின் வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றன. இந்த நிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் குறித்து பார்க்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவை பொறுத்தவரை 2 முதல் 3 ஆண்டுகளுக்கு மேலான முதலீடுகளுக்கு பொதுமக்களுக்கு 6.45 சதவீதம் வட்டி விகிதம் வழங்குகிறது.
அதேபோல் 5-10 ஆண்டுகள் வரையிலான முதலீடுகளுக்கு மூத்தக் குடிமக்களுக்கு 7.05 சதவீதம் வட்டி வழங்குகிறது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி வங்கியை பொறுத்தமட்டில் 1 முதல் 2 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எஃப்.டி முதலீடுகளுக்கு பொதுக்குடிமக்களுக்கு 6.60 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
அதேநேரம் 5-10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு மூத்தக் குடிமக்களுக்கு 7.10 சதவீதம் ரிட்டன் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : 6 மாதத்தில் 30 சதவீதம் ரிட்டன்.. இந்த டிஃபென்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்கள் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com