Insolvency & Bankruptcy Code Bill 2026: மாநிலங்களவை குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, நாடாளுமன்றம் 2026-ஆம் ஆண்டின் திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்ட மசோதாவை நிறைவேற்றியது.
Insolvency & Bankruptcy Code Bill 2026: மாநிலங்களவை குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, நாடாளுமன்றம் 2026-ஆம் ஆண்டின் திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்ட மசோதாவை நிறைவேற்றியது.

Published on: April 2, 2026 at 10:48 am
புதுடெல்லி, ஏப்.2, 2026: நாடாளுமன்றத்தில், 2026-ஆம் ஆண்டின் திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்ட மசோதா இன்று (புதன்கிழமை) நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு மாநிலங்களவை குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளித்ததை அடுத்து நிறைவேற்றப்பட்டத.
திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்ட (திருத்த) மசோதா, 2026-ஐ நாடாளுமன்றம் நேற்று மாநிலங்களவை குரல் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரித்து நிறைவேற்றியுள்ளது. பெருநிறுவன விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா இந்த மசோதாவை முன்மொழிந்தார். இது 2016-ஆம் ஆண்டின் திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டத்தை மேலும் திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடையே உள்ள நடைமுறை தாமதங்கள் மற்றும் விளக்கச் சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் இந்த மசோதா முயல்கிறது.
மசோதா மீதான விவாதத்திற்குப் பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டம் என்பது வெறும் கடன் மீட்பு வழிமுறையாகச் செயல்படுவதற்காக அல்ல, மாறாக லாபகரமான வணிகங்களைக் காப்பாற்றுவதற்கும், நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், நிறுவன மதிப்பைப் பாதுகாப்பதற்கும் ஒரு கட்டமைப்பாகச் செயல்படுவதற்காகவே உருவாக்கப்பட்டது என்றார்.
மேலும், திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டத் திருத்த மசோதாவில், தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 11 திருத்தங்கள் மற்றும் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திருத்தம் உட்பட மொத்தம் 12 திருத்தங்கள் உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பா.ஜ.க எம்.பி சுரேஷ் கோபிக்கு சிக்கல்.. செக் வைத்த இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com