Fixed Deposit Interest Rates: ரூ.5 லட்சத்தை ஃபிக்ஸட் டெபாசிட் ஆக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் தெரியுமா?
Fixed Deposit Interest Rates: ரூ.5 லட்சத்தை ஃபிக்ஸட் டெபாசிட் ஆக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் தெரியுமா?
Published on: May 20, 2025 at 1:05 pm
சென்னை, மே 19 2025: இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்ய பெருமளவு விரும்புகின்றனர். அதிலும், முதலீட்டாளர்கள் எஸ்.பி.ஐ போன்ற முன்னணி வங்கிகளில் தங்களின் பணத்தை முதலீடு செய்ய விரும்புகின்றனர்.
இந்த நிலையில், ரூ.5 லட்சம் ஒன்டைம் ஆக முதலீடு செய்தால் எஸ்.பி.ஐ மற்றும் மற்ற வங்கிகளில் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம். இதில் பல்வேறு வங்கிகளின் ஓராண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு
ஒராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு எஸ்.பி.ஐ பொதுக்குடிமக்களுக்கு 6.80 சதவீத வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 7.30 சதவீத வட்டியும் வழங்குகிறது.
அதன்படி ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் பொதுக்குடிமக்களுக்கு ரூ.5 லட்சத்து 34 ஆயிரத்து 877ம், மூத்தக் குடிமக்களுக்கு ரூ.5 லட்சத்து 37 ஆயிரத்து 511ம் கிடைக்கும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு பொதுக்குடிமக்களுக்கு 6.80 சதவீத வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 7.30 சதவீத வட்டியும் வழங்குகிறது.
அதன்படி, ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் பொதுகுடிமக்கள் ரூ.5 லட்சத்து 34 ஆயிரத்து 877ம், மூத்தக் குடிமக்கள் ரூ.5 லட்சத்து 37 ஆயிரத்து 511ம் கிடைக்கும்.
எஸ்.பி.ஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு ஒரே கால வட்டி விகிதத்தை வழங்குகின்றன.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு பொதுகுடிமக்களுக்கு 6.60 சதவீத வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 7.10 சதவீத வட்டியும் வழங்குகிறது.
அந்த வகையில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் பொதுகுடிமக்கள் ரூ.5 லட்சத்து 33 ஆயிரத்து 826ம், மூத்தக் குடிமக்கள் ரூ.5 லட்சத்து 36 ஆயிரத்து 456ம் பெறுவார்கள்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
மற்றொரு தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியை பொறுத்தமட்டில் ஓராண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு பொதுக்குடிமக்களுக்கு 6.70 சதவீத வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 7.20 சதவீத வட்டியும் வழங்குகிறது. அதன்படி, ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மூத்தக் குடிமக்கள் ரூ.5 லட்சத்து 36 ஆயிரத்து 984ம், பொதுக்குடிமக்கள் ரூ.5 லட்சத்து 34 ஆயிரத்து 361ம் பெறுவார்கள்.
இதையும் படிங்க : ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை குறைத்த எஸ்.பி.ஐ; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com