Tata Consumer Products: டாடா கன்ச்யூமர் புராடக்ட்ஸ் பங்கில் 35% வரை உயர்வு வாய்ப்பு உள்ளது.
Tata Consumer Products: டாடா கன்ச்யூமர் புராடக்ட்ஸ் பங்கில் 35% வரை உயர்வு வாய்ப்பு உள்ளது.

Published on: March 7, 2026 at 12:30 pm
மும்பை, மார்ச் 7, 2026: டாடா கன்ச்யூமர் புராடக்ட்ஸ்பங்கில் 35% வரை உயர்வு வாய்ப்பு உள்ளது என நுவாமா (Nuvama) நிறுவனத்தின் அறிக்கைகள் கணிக்கின்றன.
இதற்கு காரணம், டாடா நிறுவனம் ‘வெல்னெஸ் பைவோட் (Wellness Pivot)’ எனப்படும் புதிய துறையில் கவனம் செலுத்தி, 2025 டிசம்பர் காலாண்டில் மட்டும் ₹1.2 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது; இது வருடாந்திர அடிப்படையில் 30% க்கும் மேல் வளர்ச்சியை காட்டுகிறது.
அதாவது வருவாய் வளர்ச்சியானது, 2025 டிசம்பர் காலாண்டில் ₹1.2 பில்லியன் ஆக காணப்படுகின்றது. இதில், ‘Wellness Pivot’ புதிய துறை ஆரோக்கியம், நலன், மற்றும் புதிய வாழ்க்கைமுறை சார்ந்த பொருட்களில் கவனம் செலுத்துகிறது.
நுவாமா மதிப்பீடு என்ன?
இதனால், பங்கில் 35% வரை உயர்வு வாய்ப்பு என நுவாமா மதிப்பீடுகள் கூறுகின்றன. டாடா கன்ச்யூமர் கேட்டகிரியில் கடந்த காலங்களில் தேநீர், உப்பு போன்ற பாரம்பரிய பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.
இந்த நிலையில், டாடா கன்ச்யூமர் புராடக்ட்ஸ் பங்கின் தற்போதைய விலை சுமார் ₹1,124–₹1,125 ஆக உள்ளது (மார்ச் 2, 2026 நிலவரப்படி). இது சமீபத்தில் 1.3–1.5% சரிவைக் கண்டுள்ளது.
அதேநேரம் தேசிய பங்குச் சந்தையில் ரூ.1,124.50 எனவும், மும்பை பங்குச் சந்தையில் ரூ.1,125.20 எனவும் காணப்படுகின்றது. FMCG துறையில் கடுமையான போட்டி காரணமாக அபாயங்களும் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.2.52 லட்சம் ரிட்டன்.. பெஸ்ட் லம்ப்சம் மியூச்சுவல் ஃபண்ட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com