National Conference of Trade Leaders: துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களை புறக்கணிக்க இந்திய வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
National Conference of Trade Leaders: துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களை புறக்கணிக்க இந்திய வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
Published on: May 16, 2025 at 9:29 pm
புதுடெல்லி, மே 16 2025: துருக்கி மற்றும் அஜர்பைஜானின் வர்த்தக புறக்கணிப்பு குறித்து தேசிய வர்த்தகத் தலைவர்கள் புதுடெல்லியில் இன்று (மே 16 2025) ஒன்று கூடினார்கள்.
அப்போது, “துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாட்டு பொருள்கள் இறக்குமதியை புறக்கணிக்க வேண்டும்” என முடிவெடுக்கப்பட்டது.
இது குறித்து, பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால் கூறுகையில், இந்திய ஆயுதப்படைகள் மற்றும் துணிச்சலான வீரர்களை கௌரவிக்கும் வகையில் நாடு தழுவிய திரங்கா யாத்திரை அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “துருக்கியில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் குறித்து ஒரு விவாதம் நடைபெற்றது” என்றார். தொடர்ந்து, “துருக்கி மற்றும் அஜர்பைஜானில் படமாக்கப்பட்ட எந்தவொரு விளம்பர நடவடிக்கைகளையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.
VIDEO | Delhi: National Conference of Trade Leaders discuss trade boycott of Turkey and Azerbaijan. BJP MP Praveen Khandelwal says, "A discussion was held regarding the ongoing protests against film shootings in Turkey. We have decided to boycott any promotional activities shot… pic.twitter.com/p4fPn8iJ7J
— Press Trust of India (@PTI_News) May 16, 2025
ஆபரேஷன் சிந்தூர்
பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் நின்றன.
இந்த நிலையில், துருக்கி மற்றும் அஜர்பைஜான் பொருள்களுக்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதையும் படிங்க : 7.90 சதவீதம் வரை வட்டி.. இந்தியன் வங்கி புதிய ஃபிக்ஸட் டெபாசிட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com