Budget 2026.. 2027 நிதியாண்டு நிதி பற்றாக்குறை 4.2%

Budget 2026: 2026 பட்ஜெட்டில் அரசு 2027 நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை (Fiscal Deficit) இலக்கை 4.2% என நிர்ணயிக்கும் வாய்ப்பு உள்ளது என மோர்கன் ஸ்டான்லி – நிதி பற்றாக்குறை மற்றும் வளர்ச்சி முன்னோக்கு அறிக்கை கூறுகிறது.

Published on: January 19, 2026 at 3:42 pm

புதுடெல்லி ஜனவரி 19, 2026; 2026 மத்திய பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி ஒன்றாம் தேதி மக்களவையில் தாக்கல் செய்கிறார். இந்தியாவின் 2026 மத்திய பட்ஜெட்டை முன்னிட்டு, முதலீட்டு வங்கி மோர்கன் ஸ்டான்லி அறிக்கை வெளியாகி உள்ளது.

அதில், 2027 நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை (Fiscal Deficit) இலக்கை 4.2% என நிர்ணயிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்ஜெட்டில் நுகர்வு அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த இலக்கு செலவுகள் முக்கியமாக இருக்கும். அதேசமயம், வடிவமைப்பு சீர்திருத்தங்கள் (Structural Reforms) தொடரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க; முதலீட்டுக்கு ரெடியா இருங்க.. இந்த வார புதிய IPO பட்டியல் தயார்!

நிதி பற்றாக்குறை இலக்கு

அரசு 2027 நிதியாண்டில் (FY27) நிதி பற்றாக்குறையை (Fiscal Deficit) GDP-இன் 4.2% ஆகக் குறைக்கும் வாய்ப்பு உள்ளது. இது, 2026 நிதியாண்டின் (FY26) 4.4% இலக்குடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

அரசு நிதி ஒருங்கிணைப்பை (Fiscal Consolidation) படிப்படியாக மேற்கொண்டு வருகிறது.

இதன் மூலம், மத்திய அரசின் கடன் (Central Government Debt) 2026-இல் GDP-இன் 56.1% இருந்து, 2027-இல் 55.1% ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகள், நிதி ஒழுங்கு, கடன் குறைப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவற்றை ஒருங்கிணைக்க அரசின் முயற்சியை வெளிப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; 2026 ஜனவரியில் ₹22,530 கோடி காலி.. இந்திய பங்குச்சந்தைக்கு திடீர் பின்னடைவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com