Zerodha Silver ETF scheme : ஜெரோதா சில்வர் இடிஎஃப் முதலீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், ரூ.500 முதல் முதலீடு செய்யலாம்.
Zerodha Silver ETF scheme : ஜெரோதா சில்வர் இடிஎஃப் முதலீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், ரூ.500 முதல் முதலீடு செய்யலாம்.
Published on: June 26, 2025 at 11:15 am
Updated on: June 26, 2025 at 11:16 am
புதுடெல்லி, ஜூன் 25 2025: ஜெரோதா ஃபண்ட் ஹவுஸ், ஜெரோதா சில்வர் இடிஎஃப் ஃபோஃப் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் ஜூன் 23 அன்று சந்தாவிற்காகத் தொடங்கி ஜூலை 4, 2025 அன்று நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெரோதா ஃபண்ட் ஹவுஸ், ஜெரோதா சில்வர் இடிஎஃப் ஃபோஃப் என்பது, திறந்தநிலை நிதித் திட்டமாகும்.
குறைந்தப்பட்ச முதலீடு
விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச தொகை ரூ. 500 ஆகும், அதன் பிறகு ‘ஏதேனும் தொகையின்’ மடங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். மேலும், இந்த நிதியின் தொடக்க நிகர சொத்து மதிப்பு (NAV) ஒரு யூனிட்டுக்கு ரூ. 10 ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை அறிமுகப்படுத்தி, ஜெரோதா ஃபண்ட் ஹவுஸின் தலைமை நிர்வாக அதிகாரி விஷால் ஜெயின் கூறுகையில், “முதலீட்டு இலாகாக்கள் மற்றும் நவீன தொழில்கள் இரண்டிலும் வெள்ளி ஒரு பங்கை வகிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்னணுவியல் மற்றும் வாகனத் துறைகளில் தேவை அதிகரித்து வருவதோடு, நிலைத்தன்மையை நோக்கிய உலகளாவிய மாற்றமும் வெள்ளியின் நீண்டகால வளர்ச்சிக்கு நல்ல அறிகுறியாகும்” என்றார்.
இதையும் படிங்க ரூ.15 ஆயிரம் எஸ்.ஐ.பி., ரூ.21 லட்சம் ரிட்டன்.. டாப் 5 ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com