FD interest rates: ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை இன்டஸ்இந்த் வங்கி உயர்த்தியுள்ள நிலையில், மகிந்திரா அண்ட் மகிந்திரா வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
FD interest rates: ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை இன்டஸ்இந்த் வங்கி உயர்த்தியுள்ள நிலையில், மகிந்திரா அண்ட் மகிந்திரா வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
Published on: May 2, 2025 at 8:47 pm
சென்னை, மே 2 2025: இந்திய ரிசர்வ் வங்கி ரேப்போ விகிதத்தை தொடர்ந்து குறைத்து வருகிறது. இதனால், வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை திருத்தியுள்ளது. இதில் சில வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. இந்நிலையில், இன்டஸ்இந்த் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ஏப்.29 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்தப் புதிய வட்டி விகிதத்தின்படி தற்போது வங்கி 3.50 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரை பொதுக்குடிமக்களுக்கு வட்டி விகிதங்கள் வழங்ககின்றது. மூத்தக் குடிமக்கனை பொறுத்தவரை ரூ.3 கோடிக்குள்ளான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 4 சதவீதம் முதல் 8.25 சதவீதம் வரை வட்டி விகிதம் பெறுவார்கள்.
கோடக் மகிந்திரா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்
இதற்கிடையில், கோடக் மகிந்திரா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. இந்தத் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் 2025 ஏப்ரல் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தப் புதிய வட்டி விகிதத்தின்படி, ரூ.3 கோடிக்குள்ளான ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 7-14 நாள்கள் டெபாசிட்டுக்கு பொதுகுடிமக்களுக்கு 2.75 சதவீதம் வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 3.25 சதவீதம் வட்டி விகிதமும் வழங்கப்படும். அதேபோல் 391 நாள்கள் முதல் 23 மாதங்களுக்குள்ளான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு பொதுக்குடிமக்களுக்கு 7.15 சதவீதம் ரிட்டனும், மூத்தக் குடிமக்களுக்கு 7.65 சதவீதம் வட்டி விகிதமும் வழங்கப்படும்.
இதையும் படிங்க : ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 9.10 சதவீதம் வட்டி: இந்த வங்கிகளை செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com