இந்திய பங்குச் சந்தை கடும் அழுத்தம்.. சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவு!

Sensex Tumbles 600 Points : இந்தியப் பங்குச் சந்தை இன்று (திங்கள்கிழமை) கடும் அழுத்தத்தை சந்தித்தது. சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.

Published on: July 20, 2026 at 12:31 pm

Updated on: July 20, 2026 at 12:32 pm

மும்பை, ஜூலை 20, 2026: சென்செக்ஸ் இன்று 600 புள்ளிகள் சரிந்து 77,543-க்கு வந்தது; நிஃப்டி 24,200-க்கு கீழே சரிந்தது. HDFC வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி பங்குகள் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தின. கச்சா எண்ணெய் விலை 90 டாலர் பீப்பாய் தாண்டியதால் சந்தை அழுத்தத்தில் உள்ளது.

இதில், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோடக் வங்கி, மாருதி, இன்டிகோ உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் அதிக சரிவை சந்தித்தன.

இதற்கிடையில், டெக் மகிந்திரா, ரிலையன்ஸ், பாரதி ஏர்டெல், என்.டி.பி.சி, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

உலக சந்தையை பொறுத்தமட்டில், கிஃப்ட் (GIFT) நிஃப்டி: 24,373-க்கு அருகே சோர்வான தொடக்கத்தை கண்டது. ஆசிய சந்தைகளான ஜப்பான் நிக்கெய் 4% சரிவு; கொரியா கோஸ்பி 0.38% சரிவு; ஹாங்காங் ஹாங்க் செங் 1.9% உயர்வு கண்டன.

கச்சா எண்ணெயை பொறுத்தமட்டில் பிரெண்ட் கச்சா $90.23 பீப்பாய் ஆகவும், டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் $84.16 ஆகவும் வர்த்தகமாகின.

மேலும், சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பொருள்களும் விலை உயர்ந்து காணப்படுகின்றன. இதில், பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் 214% உயர்வு கண்டுள்ளது. ஆகையால், பங்கு 6% உயர்வு கண்டுள்ளது.

ஆக்சிஸ் வங்கியை பொறுத்தமட்டில் முதலாம் காலாண்டில் (Q1FY27) லாபம் 22% உயர்ந்தாலும் என்.ஐ.எ் குறைவு காரணமாக பங்கு 5% சரிவு கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் ₹5,253 கோடியாக உயர்வு.. முதலாம் காலாண்டு அறிக்கை!

பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு, மறுசுழற்சி, விழிப்புணர்வு.. டெல்லியில் விரிவுப்படுத்திய கியா இந்தியா! ‘Project DROP’

பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு, மறுசுழற்சி, விழிப்புணர்வு.. டெல்லியில் விரிவுப்படுத்திய கியா இந்தியா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com