SBI Fixed deposit scheme: நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.20 லட்சம் ஒன்டைம் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 5 ஆண்டில் எவ்வளவு ரிட்டன் தெரியுமா?
SBI Fixed deposit scheme: நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.20 லட்சம் ஒன்டைம் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 5 ஆண்டில் எவ்வளவு ரிட்டன் தெரியுமா?
Published on: June 18, 2025 at 7:12 pm
சென்னை, ஜூன் 18 2025: நாட்டின் முன்னணி வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா திகழ்கிறது. இந்த வங்கியியில் ரூ.20 லட்சம் ஒருமுறை முதலீடு செய்தால், 5 ஆண்டில் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் இதேபோல் எஸ்.பி.ஐ மட்டுமின்றி மற்ற வங்கிகளின் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
எஸ்.பி.ஐ வங்கியில் 5 ஆண்டு எஃப்.டி முதலீடுக்கு பொதுமக்களுக்கு 6.30 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 7.30 சதவீதமும் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. நீங்கள் இந்த வங்கியில் ரூ.20 லட்சம் ஒன்டைம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகால முடிவில் பொதுகுடிமக்கள் ரூ.27 லட்சத்து 33 ஆயிரத்து 799ம், மூத்தக் குடிமக்கள் ரூ.28 லட்சத்து 71 ஆயிரத்து 563ம் வட்டியாக பெறுவார்கள்.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி பொதுக்குடிமக்களுக்கு 6.50 சதவீத வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 7 சதவீத ரிட்டனும் வழங்குகிறது. ஆக இந்த வங்கியில் ரூ.20 லட்சம் ஒன்டைம் முதலீடு செய்தால் 5 ஆண்டு முடிவில் பொதுக்குடிமக்கள் ரூ.27லட்சத்து 60 ஆயிரத்து 840ம், மூத்தக் குடிமக்கள் ரூ.28 லட்சத்து 29 ஆயிரத்து 556ம் ரிட்டன் ஆக பெறுவார்கள்.
இதையும் படிங்க : ரூ.20 லட்சம் ஒன்டைம் முதலீடு; ரூ.7 கோடி திரட்ட எத்தனை ஆண்டுகள் ஆகும்?
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி வங்கியை பொறுத்தமட்டில் பொதுக் குடிமக்கள் 6.40 சதவீத வட்டியும், மூத்தக் குடிமக்கள் 6.90 சதவீத வட்டியும் பெறுவார்கள். இதில் ரூ.20 லட்சம் ஒன்டைம் முதலீடு செய்தால் 5 ஆண்டு முடிவில் மூத்தக் குடிமக்கள் ரூ.28 லட்சத்து 15 ஆயிரத்து 684ம், பொது குடிமக்கள் ரூ.27 லட்சத்து 47 ஆயிரத்து 288ம் பெறுவார்கள்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
மற்றொரு தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ.யில் 5 ஆண்டு எஃப்.டிக்கு பொதுகுடிமக்களுக்கு 6.60 சதவீத வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 7.10 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், ரூ.20 லட்ச முதலீடுக்கு பொதுகுடிமக்களுக்கு ரூ.27 லட்சத்து 74 ஆயிரத்து 455ம், மூத்தக் குடிமக்களுக்கு ரூ.28 லட்சத்து 43 ஆயிரத்து 493ம் கிடைக்கும்.
Disclaimer: (இந்தச் செய்தி தகவலுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. முதலீடுக்கு முன் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் முதலீடு குறித்து முழுவதுமாக கேட்டு தெரிந்துக்கொள்ளவும். முதலீட்டாளரின் லாப நஷ்டங்களுக்கு திராவிடன் டைம்ஸ் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது)
இதையும் படிங்க : ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு, ரூ.27 லட்சம் ரிட்டன்; டாப் லார்ஜ்கேப் ஃபண்ட்கள்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com