Gold imported in India: இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தங்கம் இறக்குமதி தொடர்பான அறிக்கைகள் வெளியாகி உள்ளன.
Gold imported in India: இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தங்கம் இறக்குமதி தொடர்பான அறிக்கைகள் வெளியாகி உள்ளன.
Published on: May 4, 2025 at 6:17 pm
Updated on: May 4, 2025 at 6:43 pm
சென்னை மே 4 2025: இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. மதிப்பு மிக்க இந்த மஞ்சள் உலகத்தை தங்கள் வீடுகளிலும், தங்க நகைகளாக அணிந்து கொள்வதிலும் மக்கள் பெருமளவு ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்தே காணப்படுகிறது. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி 2025 மார்ச் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 192.13 சதவீதம் உயர்ந்து 447 கோடி டாலராக காணப்படுகிறது. இதுவே 2024 ஆம் ஆண்டு தங்கத்தின் இறக்குமதி 153 கோடி டாலராக காணப்பட்டது.
இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் தங்கத்தின் இறக்குமதி ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 200 சதவீதம் வரை உயர்வை கண்டுள்ளதை பார்க்க முடிகிறது.
தங்கத்தில் முதலீடு
இந்திய நாட்டைப் பொருத்தமட்டில் தங்கத்தில் முதலீடு செய்வதும் அதிகரித்து காணப்படுகிறது. மற்ற திட்டங்களில் நிச்சயமற்ற தன்மைகள் இருப்பதாக கருதும் முதலீட்டாளர்கள் ஆபத்து குறைந்த முதலீடாக தங்கத்தை பார்க்கின்றனர்.
தங்கமும் கடந்த காலங்களில் இருந்தே உயர்வை சந்தித்து வருகிறது. இதுவரை தங்கத்தின் விலை அதிகரித்தே காணப்படுகிறது. இதனால் தங்கத்தை முதலீட்டு பொருளாகவும் பல்வேறு முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
இதன் காரணமாகவும் இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்து காணப்படுவதாக முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் உலக அளவில் பார்க்கும்போது, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக அளவு தங்கத்தை இறக்குமதி செய்து கொடுக்கிறது. மேலும் இந்தியாவின் தங்க இறக்குமதிக்கு ஆதாரமாக சுவிட்சர்லாந்து நாடு திகழ்கிறது. இந்தியாவின் தங்கத்தின் இறக்குமதில் 40 சதவீதம் இங்கிருந்து தான் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட்; ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி, ரூ.14.36 லட்சம் ரிட்டன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com