HDB Financial Services IPO: ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கியின் NBFC பிரிவான HDB நிதி சேவைகள், ஜூன் 25 அன்று அதன் ரூ.12,500 கோடி IPO-வைத் தொடங்குகிறது. ஒரு பங்கிற்கு ரூ.700 முதல் ரூ.740 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
HDB Financial Services IPO: ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கியின் NBFC பிரிவான HDB நிதி சேவைகள், ஜூன் 25 அன்று அதன் ரூ.12,500 கோடி IPO-வைத் தொடங்குகிறது. ஒரு பங்கிற்கு ரூ.700 முதல் ரூ.740 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
Published on: June 24, 2025 at 10:21 am
சென்னை, ஜூன் 24 2025: ஹெச்.டி.பி ஃபைனான்சியல் சர்வீஸ் நிதிச் சேவைகளின் ரூ.12,500 கோடி மதிப்புள்ள ஆரம்ப பொது வெளியீடு (IPO) ஜூன் 25 புதன்கிழமை சந்தாவிற்காகத் தொடங்க உள்ளது.
இது, ஜூன் 27 வெள்ளிக்கிழமை வரை திறந்திருக்கும். இதில், ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் ரூ.2,500 கோடி மதிப்புள்ள புதிய வெளியீட்டையும் ரூ.10,000 கோடி மதிப்புள்ள விற்பனைக்கான சலுகையையும் ஒருங்கிணைக்கிறது.
ஐ.பி.ஓ விலை என்ன?
ஹெச்.டி.பி (HDB) நிதிச் சேவைகளின் ஐ.பி.ஓ விலை வரம்பு ரூ.10 முகமதிப்பில் ஒரு பங்குக்கு ரூ.700 முதல் ரூ.740 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹெச்.டி.எஃப்.சி வங்கி ரூ.10 முகமதிப்பு கொண்ட நிறுவனத்தின் 750,596,670 பங்குகளை வைத்திருக்கிறது. இது வழங்கப்பட்ட முன்-சலுகையின் 94.04 சதவீதத்திற்கு சமம் ஆகும்.
தொடர்ந்து, ஹெச்.டி.பி நிதி சேவைகள் IPO ஒரு பங்கிற்கு ரூ.700 முதல் ரூ.740 வரை விலை வரம்பில் வருகிறது. சில்லறை விற்பனை பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு, குறைந்தபட்ச முதலீடு ஒரு லாட் 20 பங்குகளில் இருந்து தொடங்குகிறது, இது விலை வரம்பின் மேல் இறுதியில் ரூ.14,000 வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட்.. ரூ.20 லட்சம் ஒன்டைம் முதலீடு.. 5 ஆண்டுகளில் எவ்வளவு ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com