ஜி.எஸ்.பி கிராப் சயின்ஸ் IPO.. ரூ.400 கோடி திரட்ட இலக்கு.. ஒரு பங்கின் விலை ரூ.10!

GSP Crop Science IPO: ஜி.எஸ்.பி கிராப் சயின்ஸ் ஐ.பி.ஓ இரண்டாம் நாளில் 81% பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கிரே மார்க்கெட் பிரிமீயம் (GMP) ₹0 ஆக உள்ளது, இதனால் லிஸ்டிங் லாபம் வாய்ப்பு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published on: March 18, 2026 at 11:22 am

மும்பை, மார்ச் 18, 2026: ஜி.எஸ்.பி கிராப் சயின்ஸ் ஐ.பி.ஓ-வை பொருத்தமட்டில், நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் உயர்ந்த நிகர மதிப்புடைய முதலீட்டாளர்கள் (HNIs) வலுவான ஆர்வம் காட்டுகின்றனர். எனினும், ரீடெயில் முதலீட்டாளர்களின் பங்கேற்பு பலவீனமாக உள்ளது. இதற்கிடையில், ஜி.எஸ்.பி கிராப் சயின்ஸ் ஐ.பி.ஓ இரண்டாம் நாளில் 81% பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கிரே மார்க்கெட் பிரிமீயம் (GMP) ₹0 ஆக உள்ளது, இதனால் லிஸ்டிங் லாபம் வாய்ப்பு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நிறுவனத்தின் வளர்ச்சி வாய்ப்புகளை நம்பி, நீண்டகால முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம் என பொருளாதார முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். மேலும், ஜி.எம்.பி ஃப்ளாட்டில் இருப்பதால், குறுகிய கால முதலீட்டாளர்கள் தவிர்க்கலாம் என்பதும் அவர்களின் வாதம். அந்த வகையில், இந்த ஐ.பி.ஓ.வில் பங்கேற்கும் முன் அடிப்படை மதிப்பீடு மற்றும் சந்தை நிலையை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஐ.பி.ஓ.வின் அளவு ₹400 கோடி ஆகும்.

இதையும் படிங்க: முதலீடுக்கு 15.56% வருமானம்.. SBI பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீஸ் ஃபண்ட் எப்படி?

பங்கின் விலை

இதில் ரூ.200 கோடி மதிப்பிலான 75 லட்சம் ஈக்விட்டி பங்குகள் புதிதாக வெளியிடப்படுகின்றன. மேலும், இந்த, ஐ.பி.ஓ-வின் விலை வரம்பு ₹304 முதல் ₹320 வரை ஒரு பங்கிற்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பங்குக்கும் முகவிலை (Face Value) ₹10 ஆகும்.

இதன் பொருள், முதலீட்டாளர்கள் ₹304–₹320 இடையே பங்குகளை வாங்க விண்ணப்பிக்கலாம், ஆனால் பங்கின் அடிப்படை முகவிலை ₹10 மட்டுமே. ஐ.பி.ஓ விலை முகவிலையை விட அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அது நிறுவனத்தின் மதிப்பீடு மற்றும் சந்தை நிலையை பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பான் கார்டு விதிகளில் மாற்றம்: புதிய வழிகாட்டுதல்களை தெரிஞ்சுக்கோங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com