பெட்ரோல், டீசல் சுங்க வரி ரூ.10 குறைப்பு.. மத்திய அரசு நடவடிக்கை!

Petrol, Diesel Excise Reduced: மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு லிட்டருக்கு 10 ரூபாய் மத்திய சுங்க வரியை குறைத்துள்ளது.

Published on: March 28, 2026 at 11:14 am

புதுடெல்லி, மார்ச் 28, 2026: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா அரசு, உள்நாட்டு பயன்பாட்டிற்காக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு லிட்டருக்கு 10 ரூபாய் மத்திய சுங்க வரியை குறைத்துள்ளது இது தொடர்பாக, சமூக ஊடகப் பதிவில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மேற்கு ஆசியா நெருக்கடியை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது விலையேற்றத்திலிருந்து நுகர்வோருக்கு பாதுகாப்பளிக்கும் என்றும் கூறினார்.

அவர் மேலும், டீசல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு 21.5 ரூபாய், விமான டர்பைன் எரிபொருளுக்கு லிட்டருக்கு 29.5 ரூபாய் சுங்கம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் உள்நாட்டு பயன்பாட்டிற்கான போதுமான கிடைப்பை உறுதி செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் மற்றும் விலைகளில் ஏற்படும் மாற்றங்களிலிருந்து குடிமக்களை பாதுகாக்க அரசு எப்போதும் உறுதி செய்துள்ளதாக நிதி அமைச்சர் வலியுறுத்தினார். இந்நிலையில், பெட்ரோல், டீசல் சுங்க வரி குறைப்பு நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐ.பி.ஓ-வை விட 65% நிறுவனங்கள் விற்பனை விலை சரிவு.. அதிர்ச்சி தகவல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com