Gold Rate Today: தங்கத்தின் விலையில் இன்று அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கிராமுக்கு ரூபாய் 80 வரை அதிகரித்து காணப்படுகிறது. இது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Gold Rate Today: தங்கத்தின் விலையில் இன்று அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கிராமுக்கு ரூபாய் 80 வரை அதிகரித்து காணப்படுகிறது. இது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Published on: March 8, 2025 at 10:04 am
Updated on: March 8, 2025 at 1:06 pm
இன்றைய தங்கம் விலை (08-03-2025)மஞ்சள் உலோகம் என அழைக்கப்படும் தங்கத்தின் விலை, ஏற்றத்துடனே காணப்படுகிறது. அவ்வப்போது விலையில் சற்று இறக்கம் ஏற்பட்டாலும் அடுத்த சில தினங்களில் பெரிய அளவில் உயர்வு காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 80 உயர்ந்து எட்டு கிராம் கொண்ட ஒரு பவுன் விலை ₹ 64 ஆயிரத்து 320 என விற்பனையாகி வருகிறது. அந்த வகையில் ஒரு கிராமின் விலை ₹8,040 என காணப்படுகிறது. இது, நேற்றைய (மார்ச் 7, 2025) தினத்துடன் ஒப்பிடுகையில் ரூபாய் என்பது அதிகமாகும்.
24 கேரட் தங்கத்தின் விலை
24 கேரட் தூய தங்கத்தை பொருத்தவரை சென்னையில் ஒரு கிராம் ரூபாய் 8,71 என நிர்ணயிக்கப்பட்டு எட்டு கிராம் கொண்ட ஒரு பவுன் விலை ₹ 70 ஆயிரத்து 168 என விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளியைப் பொருத்தமட்டில் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி கிராம் வெள்ளி ரூபாய் 108 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு கிலோ பார் வெள்ளி ரூபாய் 1 லட்சத்து 8000 விற்பனையாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த மூன்று தினங்களாகவே வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த மாதத்தில் வெள்ளி கிராம் குறைந்தபட்சமாக ரூபாய் 15 வரை சரிந்து விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க மாதந்தோறும் வங்கிக் கணக்கில் ரூ.2500.. மகிளா சம்ரித்தி யோஜனா: எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன ஆவணங்கள் தேவை?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com