Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து விற்பனையாகிறது.
Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து விற்பனையாகிறது.
Published on: May 5, 2025 at 12:35 pm
சென்னை, மே 05 2025: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ரூ. 74 ஆயிரத்தை கடந்து நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து குறைந்து காணப்படுகிறது. இது நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. இந்நிலையில், இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து இப்போது பார்க்கலாம்.
தங்கம் விலை
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 8,755-க்கும் சவரன் ரூ. 70,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 9,550-க்கும் சவரன் ரூ. 76,400 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 20 உயர்ந்துள்ளது. இதனால் சவரனுக்கு ரூ. 140 உயர்ந்துள்ளது. அந்தவகையில் கிராம் தங்கம் ரூ. 8,775-ஆகவும், சவரன் ரூ. 70,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தூய தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் ரூ. 9,572-க்கும் சவரன் ரூ. 76,576-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை பொருத்தவரை கடந்த சில தினங்களாக கிராம் வெள்ளி ₹108 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றும் மாற்றமின்றி கிராம் வெள்ளி ₹108 ஆகவும் 1 கிலோ கொண்ட பார் வெள்ளி ₹10,8000 ஆகவும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க 8.40 சதவீதம் வரை வட்டி.. மார்க்கெட்டில் பெஸ்ட் ரிட்டன்.. ஸ்ரீராம் எஃப்.டி தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com