இன்று மட்டும் ₹2,200 உயர்வு.. ஒரு கிராம் கோல்டின் ரேட் இதுதான்.. விஷம் போல் ஏறிய தங்கம்..!

Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2200 வரை உயர்ந்துள்ளது.

Published on: April 22, 2025 at 10:08 am

சென்னை, ஏப். 22 2025: தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத வகையில் 70 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது கிராம் தங்கம் பத்தாயிரத்தை நெருங்கியுள்ளது. தங்கம் விலை தினமும் ஏற்றமும் இறக்கமுமாக காணப்படுகிறது. இந்நிலையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

தங்கம் விலை

22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று கிராம் ₹9,015 ஆகவும் 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ₹72,120 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ₹9,834 ஆகவும் சவரன் ₹78,672 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் கிராமுக்கு ₹275 உயரந்துள்ளது. இதனால் சவரனுக்கு ரூ. 2200 உயர்ந்துள்ளது.

அந்த வகையில் கிராம் ₹9,290 ஆகவும் ஒரு சவரன் ₹74,320 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொருத்தவரை கிராம் ₹10,134 -க்கும் சவரன் ₹81,072 விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை பொருத்தவரை கிராம் வெள்ளி ₹111 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றும் மாற்றமின்றி கிராம் வெள்ளி ₹111 ஆகவும் 1 கிலோ கொண்ட பார் வெள்ளி ₹11,0000 ஆகவும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி: 20 ஆண்டுகளில் ரூ.2 கோடி ரிட்டன்? எப்படி தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com