Gold Rate Today: கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வரும் நிலையில் இன்றும் சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது.
Gold Rate Today: கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வரும் நிலையில் இன்றும் சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது.

Published on: March 17, 2026 at 11:00 am
சென்னை, மார்ச் 17, 2026: தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. வெள்ளி விலையும் குறைந்து வந்த நிலையில் இன்று ரூ. 4 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை
தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 60 குறைந்துள்ளது. இதனால் சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது. அந்தவகையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ. 14 ஆயிரத்து 650 க்கும் சவரன் ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 15 ஆயிரத்து தொள்ளாயிரத்து 82க்கும் சவரன் ரூ. 1 லட்சத்து 27 ஆயிரத்து 856க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொறுத்தமட்டில் கிலோவுக்கு ரூ. 4 ஆயிரம் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ. 276க்கு விற்பனை செய்யப்பட்டநிலையில், இன்று ரூ. 4 உயர்ந்து ரூ. 280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 80 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: எந்த மியூச்சுவல் ஃபண்ட் பெஸ்ட்? எஸ்பிஐ டாப் ஃபண்ட்கள் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com