ஆட்டம் காட்டிய தங்கம்; நேற்றே வாங்கி இருக்கலாம்.. இன்று புதிய உச்சம்!

Gold Rate Today: தங்கத்தின் விலை இன்று (மே 16 2025) அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8,720 ஆக காணப்படுகிறது.

Published on: May 16, 2025 at 12:42 pm

சென்னை, மே 16 2025: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (வெள்ளிக்கிழமை) புதிய உச்சத்துக்கு சென்றது. நேற்று (மே 15 2025) ஆபரணத் தங்கம் கிராம் ரூ.8610 ஆக காணப்பட்ட நிலையில் இன்று கிராம் ரூ.8,720 ஆக காணப்பட்டது.

அந்த வகையில் இன்று ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.69 ஆயிரத்து 760 ஆக காணப்படுகிறது. 24 காரட் தூயத் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.9512 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.76 ஆயிரத்து 96 ஆக காணப்படுகிறது.

இதையும் படிங்க: ரூ.20 லட்சம் ஒன்டைம் முதலீடு; ரூ.7 கோடி திரட்ட எத்தனை ஆண்டுகள் ஆகும்?

வெள்ளி விலை

வெள்ளியை பொறுத்தமட்டில் நேற்றைய விலையில் தொடர்கிறது. அந்த வகையில் கிராம் வெள்ளி ரூ.108 என நிர்ணயிக்கப்பட்டு, கிலோ பார் வெற்றி ரூ.1, 08,000 ஆக காணப்படுகிறது. வெள்ளியை பொறுத்தமட்டில் 2025 மே 11ஆம் தேதி அதிகப்பட்சமாக கிராம் ரூ.111 வரை சென்றது. அதாவது கிலோ பார் வெள்ளி ரூ.1,11,000 ஆக விற்பனையானது. அந்த வகையில் தற்போது வெள்ளி விலையில் கிலோ ரூ.3 ஆயிரம் சரிந்துள்ளது.

இதையும் படிங்க : முதலீடு செய்யப் போறீங்களா? வாரன் பஃபெட் 5 விதிகள்.!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com