ரூ.2,300 விலை குறைந்த தங்கம்.. இந்தியா- பாகிஸ்தான் டென்ஷன் காரணமா?

Gold Rate Today: தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக குறைந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Published on: May 12, 2025 at 6:08 pm

Updated on: May 12, 2025 at 6:09 pm

சென்னை, மே 12 2025: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்து சில தினங்களாக குறைந்து வருகிறது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்நிலையில் இன்று மேலும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2300 வரை குறைந்துள்ளது. தங்கம் விலை இன்று இரண்டாவது முறையாக சரிவை சந்தித்துள்ளது.

தங்கம் விலை

சென்னையில் இன்று (மே 12 2025) காலை நேற்றைய விலையைவிட கிராமுக்கு ரூ. 165 குறைந்து 22 காரட் கொண்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 8,880 என நிர்ணயிக்கப்பட்டு ரூ.71,040-க்கு விற்பனையானது.

இந்நிலையில், மீண்டும் கிராமுக்கு ரூ. 130 குறைந்துள்ளது. இதனால் சவரனுக்கு மீண்டும் ரூ. 1040 குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ. 2360 குறைந்துள்ளது. அந்த வகையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ. 8,750-க்கும் சரவன் ரூ. 70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் கொண்ட தூய தங்கத்தின் விலை கிராம் ரூ. 9,545-க்கும் சவரன் ரூ. 76,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளியை பொறுத்தமட்டில் நேற்று கிராம் ரூ.110 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு கிலோ ரூ.1,10,000 என விற்பனையானது. இன்றும் அதே விலையில் காணப்படுகிறது.
அதாவது வெள்ளியை பொறுத்தமட்டில் கடந்த 5 தினங்களாக ஒரே விலையில் காணப்படுகிறது. வெள்ளி அதிகப்பட்சமாக மே 6ஆம் தேதி கிராம் ரூ.111 ஆக உயர்ந்து காணப்பட்டது.

இதையும் படிங்க ரூ.20 லட்சம் ஒன்டைம் முதலீடு; ரூ.7 கோடி திரட்ட எத்தனை ஆண்டுகள் ஆகும்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com