Current FD rates for 3-year FDs: பிரபல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் 3 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் மற்றும் வட்டி விகிதம் குறித்து பார்க்கலாம்.
Current FD rates for 3-year FDs: பிரபல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் 3 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் மற்றும் வட்டி விகிதம் குறித்து பார்க்கலாம்.
Published on: May 5, 2025 at 1:44 pm
சென்னை, மே 5 2025: இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் பொதுவாக ரிஸ்க் அதிகம் விரும்புவதில்லை. ஆகவே, அவர்கள் ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை பொறுத்தவரை பல்வேறு கால அளவுகளில் கிடைக்கின்றன. மேலும், அனைத்து வங்கிகளும் ஒரே மாதிரியான வட்டி விகிதங்களை வழங்குவதில்லை.
ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி, காலத்துக்கு காலம் ஏற்ப மாறுகின்றன. இந்த நிலையில், நாட்டின் முன்னணி தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்ளை பார்க்கலாம்.
இந்த வட்டி விகிதங்கள் ரூ.3 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு பொதுக்குடிமக்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், வங்கிகளை பொறுத்தமட்டில் பொதுகுடிமக்களை விட மூத்தக் குடிமக்களுக்கு வட்டி விகிதங்கள் சற்று அதிகமாக வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளின் 3 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.
பொதுத்துறை வங்கிகள் | 3 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் |
---|---|
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா | 6.70 |
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா | 6.75 |
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி | 6.00 |
பஞ்சாப் நேஷனல் வங்கி | 6.75 |
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி | 6.50 |
இந்தியன் வங்கி | 6.25 |
சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா | 6.75 |
கனரா வங்கி | 7.20 |
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா | 6.50 |
பேங்க் ஆஃப் பரோடா | 7.15 |
பேங்க் ஆஃப் இந்தியா | 6.50 |
தனியார் வங்கிகள் | 3 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் |
---|---|
யெஸ் வங்கி | 7.50 |
சௌத் இந்தியா வங்கி | 6.70 |
ஆர்.பி.எல் வங்கி | 7.50 |
கோடக் மகிந்திரா வங்கி | 6.90 |
கர்நாடகா வங்கி | 6.50 |
இன்டஸ்இந்த் வங்கி | 7.25 |
ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி | 6.25 |
பந்தன் வங்கி | 7.25 |
டி.பி.எஸ் வங்கி | 7.50 |
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி | 6.90 |
ஃபெடரல் வங்கி | 7.00 |
ஹெச்.டி.எஃப்.சி வங்கி | 6.90 |
Disclaimer: (இந்தச் செய்தி தகவலுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. முதலீடுக்கு முன் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் முதலீடு குறித்து முழுவதுமாக கேட்டு தெரிந்துக்கொள்ளவும். முதலீட்டாளரின் லாப நஷ்டங்களுக்கு திராவிடன் டைம்ஸ் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது)
இதையும் படிங்க : தங்கத்தை வாங்கிக் குவிக்கும் இந்தியா.. 2025 மார்ச்சில் மட்டும் இறக்குமதி இவ்வளவா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com