ஹோர்முஸ், கண்டெய்னர் மீது தாக்குதல்.. கச்சா எண்ணெய் விலை கிடுகிடு ஏற்றம்!

Crude oil prices increase: பெட்ரோலிய மூலப் பொருட்களான கச்சா எண்ணெய் விலைகள் வரலாறு காணாத உயர்வை நோக்கி நகர்கின்றன.

Published on: March 12, 2026 at 12:31 pm

மும்பை மார்ச் 12, 2026; ஈரான் அமெரிக்கா போர் காரணமாக, மேற்கு ஆசியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது; இந்தப் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. இதற்கிடையில் கத்தாரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும் ஹோர்முஸ் கடல்வழிப் பகுதியும், மூடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கச்சா எண்ணெய் கொண்டு சென்ற கப்பல்கள் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன; இது அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கச்சா பொருட்களின் விலை வரலாறு காணாத விலை உயர்வை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. அதாவது, கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. நைமேக்ஸ் மற்றும் பிரென்ட் க்ரூட் விலைகள் 7% வரை உயர்ந்துள்ளன; ஹோர்முஸ் கடல்சந்தியில் தொடரும் விநியோக தடையால் இது ஏற்பட்டுள்ளது.

சர்வதேச ஆற்றல் நிறுவனம் (IEA) அவசர கையிருப்புகளை வரலாற்று சிறப்புமிக்க முறையில் வெளியிட்டிருந்தாலும், முதலீட்டாளர்களின் கவலைகளை குறைக்க முடியவில்லை. ஹோர்முஸ் கடல்சந்தியில் கண்டெய்னர் வாகனங்கள் மீது புதிய தாக்குதல்கள் சந்தைகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: சத்தீஸ்கரில் 108 மாவோயிஸ்டுகள் சரண்.. 1 கிலோ தங்கம், ₹3 கோடி, ஆயுதங்கள் பறிமுதல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com