புதுடெல்லி, ஜன.26, 2026: 2026–27 மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்கிறார். இது அவரது தொடர்ச்சியான 9வது பட்ஜெட் ஆகும். இந்தப் பட்ஜெட்டை பொறுத்தவரை, பழைய வரி முறையை நீக்கி, புதிய முறையில் கூடுதல் கழிவுகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், ரூ.12.75 லட்சம் வரையிலான வருமானத்திற்கு ஏற்கனவே வரி விலக்கு நடைமுறையில் உள்ளது. இதனால், ரூ.20 லட்சம் வரையிலான வருமானம் பெறுவோருக்கு கூடுதல் நிவாரணம் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, மூலதன லாபம், கழிவுகள், சலுகைகள் – இவற்றில் தெளிவான அறிவிப்புகள் வருமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையில், இந்த பட்ஜெட்டில், வருமான வரி தொடர்பான முக்கிய மாற்றங்கள் மற்றும் சலுகைகள் வரி செலுத்துவோருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிதி வட்டாரங்கள் கூறுகின்றன.
வரி தாக்கல் செயல்முறையை எளிமைப்படுத்தும் முயற்சிகளும் உள்ளன.
மூத்த குடிமக்களுக்கு தனித்த வரி படிகள் வழங்கப்படுமா?
புதிய வரி முறையில் அனைத்து வயது குழுக்களுக்கும் ஒரே மாதிரியான வருமான வரி படிகள் நடைமுறையில் உள்ளன. இதனால், நிலையான வருமானத்தில் வாழும் மூத்த மற்றும் மிக மூத்த குடிமக்களின் நிதி நிலைமைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக அடிப்படை விலக்கு வரம்புகள் அல்லது குறைந்த வரி விகிதங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது, ஓய்வூதியம் அல்லது சேமிப்பில் வாழும் மூத்த குடிமக்கள், தற்போதைய ஒரே மாதிரியான வரி முறையில் அதிக சுமையை எதிர்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓய்வூதிய திருத்தம்.. 47 ஆயிரம் ஊழியர்கள் பயன்.. 30% உயர்வு.. சூப்பர் அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்