Mutual fund: கடந்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் வரை பெஸ்ட் ரிட்டன் கொடுத்த ஃபோகஸ்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
Mutual fund: கடந்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் வரை பெஸ்ட் ரிட்டன் கொடுத்த ஃபோகஸ்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
Published on: May 18, 2025 at 1:20 pm
சென்னை, மே 18 2025: இந்தியாவில் தற்போது பலரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இந்தத் திட்டங்கள் பணவீக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் வருவாய் வாய்ப்புகளை வழங்குகின்றன என முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சான்றளிக்கப்பட்ட வருமான வாய்ப்புகள் இல்லை என்பதையும் முதலீட்டாளர்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த ஃபோகஸ்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
ஃபோகஸ்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்
ஃபோகஸ்ட் மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பான இந்த புள்ளிவிவர தகவல்கள் ஏ.எம்.எஃப்.ஐ தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த புள்ளிவிவர தரவுகள் பட்டியலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 32.18 சதவீத வருடாந்திர வருமானத்தை ஹெச்.டி.எஃப்.சி ஃபோகஸ்டு 30 ஃபண்ட் வழங்கியுள்ளது.
இதையும் படிங்க : 7.90 சதவீதம் வரை வட்டி.. இந்தியன் வங்கி புதிய ஃபிக்ஸட் டெபாசிட்!
தொடர்ந்து, நிப்பான் இந்தியா ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் 27.30 சதவீத வருமானத்தையும், குவாண்ட் ஃபோகஸ்டு ஃபண்ட் 25.50 சதவீத வருமானத்தையும் வழங்கியுள்ளன. டாடா ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட்-ஐ பொறுத்தமட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 24.58 சதவீத வருமானத்தையும் அளித்துள்ளது.
Disclaimer: (மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீட்டுக்கு முன்னர் செபி (இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம்) அங்கீகரித்த முதலீட்டு நிபுணர்களிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது. முதலீட்டாளர்களின் லாப, நஷ்டங்களுக்கு திராவிடன் டைம்ஸ் பொறுப்பேற்காது)
இதையும் படிங்க :ரூ.20 லட்சம் ஒன்டைம் முதலீடு; ரூ.7 கோடி திரட்ட எத்தனை ஆண்டுகள் ஆகும்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com