Asian Development Bank : ஆசிய வளர்ச்சி வங்கி, நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 6.5%-லிருந்து 6.9%-ஆக உயர்த்தியுள்ளது.
Asian Development Bank : ஆசிய வளர்ச்சி வங்கி, நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 6.5%-லிருந்து 6.9%-ஆக உயர்த்தியுள்ளது.

Published on: April 11, 2026 at 1:04 pm
புதுடெல்லி, ஏப்.11, 2026: இந்தியாவின் வளர்ச்சியை 6.9 சதவீதமாக ஆசிய வங்கி உயர்த்தியுள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி, நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 6.5 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆசிய வளர்ச்சிக் கண்ணோட்டத்தின்படி, வலுவான உள்நாட்டுத் தேவை, தணியும் நிதி நிலைமைகள் மற்றும் இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் குறைந்த வரிகள் ஆகியவற்றின் காரணமாக, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான பொருளாதாரங்களின் வளர்ச்சிக் கண்ணோட்டம் இந்த ஆண்டும் 2027-ஆம் ஆண்டிலும் மோசமடையும் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் மற்றும் தொடரும் வர்த்தக நிச்சயமற்ற தன்மையால், இப்பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு 5.4 சதவீதமாக இருந்தது.
இந்நிலையில், 2026 மற்றும் 2027 ஆகிய இரு ஆண்டுகளிலும் 5.1 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.10,000 டிஜிட்டல் பரிவர்த்தனை.. ஒரு மணி நேரம் தாமதம்.. ரிசர்வ் வங்கி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com