8th Pay Commission: 8வது சம்பளக் குழுவில் என்ன எதிர்பார்க்கலாம்? ஜனவரி 2026ல் சம்பள உயர்வு இழக்குமா? பிப்ரவரி 2014 இல் அறிவிக்கப்பட்ட 7வது ஊதியக் குழு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2016 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது.
8th Pay Commission: 8வது சம்பளக் குழுவில் என்ன எதிர்பார்க்கலாம்? ஜனவரி 2026ல் சம்பள உயர்வு இழக்குமா? பிப்ரவரி 2014 இல் அறிவிக்கப்பட்ட 7வது ஊதியக் குழு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2016 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது.
Published on: June 14, 2025 at 10:56 am
சென்னை, ஜூன் 14 2025: மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, பிப்ரவரி 2014 இல் அறிவிக்கப்பட்ட 7வது ஊதியக் குழு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2016 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது.
எனினும், 2025 ஆம் ஆண்டின் மத்தியப்பகுதி வரை 8வது ஊதியக் குழு இன்னும் உருவாக்கப்படவில்லை. இது சம்பள உயர்வுகளில் தாமதத்திற்கு வழிவகுக்குமா?
8வது ஊதியக் குழு
8வது சம்பளக் குழுவிற்கான விதிமுறைகளுக்காக சுமார் 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இது சம்பளம் மற்றும் ஓய்வூதியத் திருத்தங்களுக்கு அடிப்படையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விரைவில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் 8வது சம்பளக் குழு, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை திருத்தும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், 8வது சம்பளக் குழு எப்போது அமைக்கப்படும்? தாமதங்கள் ஏற்படுமா? என்பது குறித்து பார்க்கலாம்.
8வது ஊதியக் குழு தாமதம்
இதற்கிடையில், ‘தி எகனாமிக் டைம்ஸ்’ ஊடகத்தில் வெளியான அறிக்கையின்படி, 8வது சம்பளக் குழு ஜனவரி 2026 இன் எதிர்பார்க்கப்படும் காலக்கெடுவைத் தாண்டி தாமதமாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 2014 இல் அறிவிக்கப்பட்ட 7வது சம்பளக் குழு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 2016 இல் நடைமுறைக்கு வந்தது.
எனினும், 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை, 8வது சம்பளக் குழு உருவாக்கப்பட்டதற்கான அறிக்கை எதுவும் இல்லை.
எதிர்பார்ப்பு என்ன?
8வது சம்பளக் குழு லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள அமைப்புகளை எவ்வாறு திருத்தும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
எனினும், ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.5 முதல் 2.8 வரை இருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், கமிஷன் அமைப்பது குறித்து கூட தெளிவு இல்லாததால், இப்போது எதையும் உறுதிப்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு, ரூ.27 லட்சம் ரிட்டன்; டாப் லார்ஜ்கேப் ஃபண்ட்கள்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com