Fixed Deposit interest rates: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த நிலையில், பெரும்பாலான வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றன.
Fixed Deposit interest rates: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த நிலையில், பெரும்பாலான வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றன.
Published on: June 14, 2025 at 7:00 am
Updated on: June 13, 2025 at 10:45 pm
சென்னை, ஜூன் 14 2025: இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து வருகிறது. இந்நிலையில், ஜூன் 6ஆம் தேதி நடந்த கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது.
இதைத் தொடர்ந்து, பல்வேறு வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றன. இந்த நிலையில், கோடக் மகிந்திரா வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 8 வங்கிகளின் ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் குறித்து பார்க்கலாம்.
8 வங்கிகளின் ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்
வ.எண் | வங்கி | பொதுக்குடிமக்கள் (%) | மூத்தக் குடிமக்கள் (%) |
---|---|---|---|
01 | யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா | 6.25 | 6.75 |
02 | பஞ்சாப் நேஷனல் வங்கி | 6.70 | 7.20 |
03 | பேங்க் ஆஃப் பரோடா | 6.50 | 7.00 |
04 | ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா | 6.50 | 7.00 |
05 | பெடரல் வங்கி | 6.50 | 7.00 |
06 | கோடக் மகிந்திரா வங்கி | 6.25 | 6.75 |
07 | ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி | 6.25 | 6.75 |
08 | ஹெச்.டி.எஃப்.சி வங்கி | 6.25 | 6.75 |
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி 2025 ஜூன் 12 அன்று அதன் வட்டி விகிதங்களை திருத்தியது. தற்போது வழக்கமான குடிமக்களுக்கு அதன் 1 வருட நிலையான வைப்புத்தொகையில் 6.6 சதவீதத்தையும் மூத்த குடிமக்களுக்கு 7.1 சதவீதத்தையும் வழங்குகிறது.
பேங்க் ஆஃப் பரோடா (BOB)
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஜூன் 12 முதல், எஃப்.டி.களுக்கு வழக்கமான குடிமக்களுக்கு 6.5 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7 சதவீதமும் வழங்குகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி, ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு வழக்கமான குடிமக்களுக்கு 6.7 சதவீதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 7.2 சதவீதத்தையும் வழங்குகிறது. இந்த விகிதங்கள் ஜூன் 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ எஃப்.டி முதலீடுக்கு வழக்கமான குடிமக்களுக்கு 6.5 சதவீதத்தையும் மூத்த குடிமக்களுக்கு 7 சதவீதத்தையும் வழங்குகிறது. இந்த விகிதங்கள் மே 16 அன்று அமலுக்கு வந்தன.
கோடக் மகிந்திரா வங்கி
கோடக் மகிந்திரா வங்கி 1 ஆண்டு எஃப்.டி முதலீடுக்கு வழக்கமான குடிமக்களுக்கு 6.25 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிகமாகவும் வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜூன் 9 முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஃபெடரல் வங்கி
ஃபெடரல் வங்கி ஜூன் 12 முதல் அமலுக்கு வந்த விகிதத்தின்படி, வழக்கமான குடிமக்களுக்கு 6.5 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7 சதவீதமும் 1 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வழங்குகிறது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கி, 1 ஆண்டு எஃப்.டி.க்கு வழக்கமான குடிமக்களுக்கு 6.25 சதவீதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 6.75 சதவீதத்தையும் வட்டியாக வழங்குகிறது. இந்த விகிதங்கள் ஜூன் 10 முதல் அமலுக்கு வந்தன.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, வழக்கமான குடிமக்களுக்கு 1 வருட நிலையான வைப்புத்தொகையில் 6.25 சதவீதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 6.75 சதவீதத்தையும் வழங்குகிறது.
இதையும் படிங்க ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை குறைத்த தனியார் வங்கிகள்.. நோட் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com