Narendra Modi: திருச்சியில் நாளை என்டிஏ பொதுக்கூட்டம் நடைபெற உள்ளநிலையில், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாளை தமிழகம் வருகிறார்.
Narendra Modi: திருச்சியில் நாளை என்டிஏ பொதுக்கூட்டம் நடைபெற உள்ளநிலையில், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாளை தமிழகம் வருகிறார்.

Published on: March 10, 2026 at 8:19 pm
Updated on: March 10, 2026 at 9:33 pm
திருச்சி, மார்ச் 10 2026: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி பஞ்சப்பூரில் நாளை மாலை நடைபெறுகிறது. கடந்த மாதம் திருவள்ளூரிலும் மற்றும் புதுச்சேரி, மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அந்த வகையில் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நாளை திருச்சியில் நடைபெறுகிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பச்சமுத்து மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதையும் படிங்க: தொழிலதிபரை கடத்தி ₹1 கோடி பேரம்…கடத்தல் கும்பலுக்கு போலீசார் வலை
இந்த பொதுக்கூட்டத்திற்கு 30 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு 5 லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய மண்டலத்தை சேர்ந்த 18 மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். டெல்லியில் இருந்து தனி விமான மூலம் திருச்சி வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிக்கு செல்கிறார்.
At around 6:30 PM tomorrow, 11th March, I will join NDA leaders of Tamil Nadu for the NDA rally in Tiruchirappalli. DMK is clearly rattled by the NDA’s rising popularity across the state. The people of Tamil Nadu have seen through the misgovernance and unfulfilled promises of…
— Narendra Modi (@narendramodi) March 10, 2026
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. முன்னேற்பாடுகளை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், நாளை பொதுக்கூட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்து இருப்பதாவது,
நாளை மார்ச் 11ஆம் தேதி மாலை 6:30 மணியளவில் திருச்சியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பேரணியில் தமிழக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் நானும் இணைய உள்ளேன். மாநிலம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரபலமடைந்து வருவதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது. திமுகவின் தவறான நிர்வாகத்தையும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அதனால் தான் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் நம்பிக்கை மற்றும் முன்னேற்ற நிகழ்ச்சி நிரலுடன் இணைகிறார்கள் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: எல்.பி.ஜி சிலிண்டர் சேவை பாதிப்பு.. பெங்களூரு, சென்னை ஹோட்டல்கள் நிலை என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com