நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டி: பும்ரா, ரிஷப் பண்ட் களமிறங்க வாய்ப்பு!

Bumrah Pant Playing Chances: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டியில், பும்ரா, ரிஷப் பண்ட் களமிறங்க வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

Published on: October 27, 2026 at 12:56 pm

புதுடெல்லி, அக்.27, 2026: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆகியோர், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்றாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக விளையாட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நவம்பர் 7-ஆம் தேதி நியூசிலாந்தின் லிங்கன் நகரில் தொடங்கும் இந்த நான்கு நாள் போட்டி, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இருவரும் தங்களது ஆட்டத்திறனை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இருவரும் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். அக்டோபர் மாதத் தொடக்கத்தில் இரானி கோப்பை போட்டியின்போது காயமடைந்த ரிஷப் பண்ட், பேட்டிங் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்; ஆனால் விக்கெட் கீப்பிங் பயிற்சியை இன்னும் தொடங்கவில்லை.

எனவே, மருத்துவக் குழுவின் உடற்தகுதி அனுமதி கிடைத்தால் மட்டுமே அவர் களமிறங்குவார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 19-ஆம் தேதி தொடங்குகிறது.

இதையும் படிங்க : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி மாற்றம்.. மைக் ஹஸ்ஸி விலகல்!

இந்திய பந்துவீச்சாளர்களின் நெருக்கடி.. பெரிய ரன்களை எடுக்க முடியாததற்குக் காரணம் என்ன? மைக்கேல் பிரேஸ்வெல் கருத்து
Death Bowling

இந்திய பந்துவீச்சாளர்களின் நெருக்கடி.. பெரிய ரன்களை எடுக்க முடியாததற்குக் காரணம் என்ன? மைக்கேல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com