இசையமைப்பாளர் தேவாவுக்கு திடீர் மாரடைப்பு.. 76வது வயதில் பிரிந்த உயிர்!

Deva Passes Away: தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா தனது 76-வது வயதில் காலமானார்.

Published on: October 17, 2026 at 1:46 pm

Updated on: October 17, 2026 at 1:49 pm

சென்னை, அக் 17 2026: தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா இன்று (அக்டோபர் 17) காலமானார். அவருக்கு வயது 76. இன்று காலையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரைப்படங்களில் தனித்துவமான இசையின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த தேவா, பல கானா பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். 1989-ஆம் ஆண்டு வெளியான மனசுக்கேத்த மகராசா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகத் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து 1990-ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் பரவலான புகழைப் பெற்றார். சென்னையின் கானா இசையைத் திரையிசையில் பிரபலப்படுத்தியதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, பாட்ஷா, அஜித் நடித்த ஆசை, காதல் கோட்டை, விஜய் நடித்த மின்சார கண்ணா, குஷி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். மெலடி பாடல்கள் முதல் துள்ளலான கானா பாடல்கள் வரை பல்வேறு வகையான இசைப் படைப்புகளை வழங்கி, தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இசைத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காகத் தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களை தேவா பெற்றுள்ளார். அவரது இசைப் பயணத்தைத் தொடர்ந்து, அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவாவும் திரைப்பட இசையமைப்பாளராகப் புகழ்பெற்றுள்ளார். தேவாவின் மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையிசையில் அவரது பாடல்களும் இசைப் பங்களிப்பும் என்றும் நினைவுகூரப்படும்.

இதையும் படிங்க: குடியுரிமை சர்ச்சையில் சிக்கிய இம்ரான் கான்.. வெளியேற உத்தரவு ஏன்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com