Satyavan Savithri Teaser: ‘சத்யவான் சாவித்திரி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Satyavan Savithri Teaser: ‘சத்யவான் சாவித்திரி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Published on: October 15, 2026 at 3:48 pm
சென்னை, அக்.15, 2026: நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படம், நீதிமன்றத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
இப்படத்தில் சாவித்திரி என்ற இளம் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவருடைய மூத்த வழக்கறிஞர் மார்க்கண்டேயன் கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடித்துள்ளார். தனது வழிகாட்டியாகக் கருதும் மூத்த வழக்கறிஞரின் செயல்பாடுகளையே சாவித்திரி எதிர்த்துக் கேள்வி கேட்கும் சூழல் கதையில் முக்கியத் திருப்பமாக அமைகிறது.
டீசரில், ஒருதலைப்பட்சமான தீர்ப்பு வழங்குவதற்காக ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டால் அதை எங்கே பெற்றுக்கொள்வீர்கள் என நீதிபதியிடம் சாவித்திரி துணிச்சலாகக் கேள்வி எழுப்பும் காட்சி இடம்பெற்றுள்ளது. நீதிமன்ற மோதல்களுடன் நகைச்சுவைக் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளன.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பாலசரவணன், சாருகேஷ், ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க : முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com