பிரதமர் வேட்பாளரா விஜய்? செங்கோட்டையன் அதிரடி பதில்!

Sengottaiyan: பிரதமர் வேட்பாளராக முதலமைச்சர் விஜய் தவெகவினரால் முன் நிறுத்தப்படுகிறாரா என்ற கேள்விக்கு, செங்கோட்டையன் பதிலளித்தார்.

Published on: September 5, 2026 at 12:47 pm

கோவை, செப்.5, 2026: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், தவெக அரசு ஐந்தாண்டுகள் நீடிக்காது என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு பதிலளித்தார்.

முதலமைச்சர் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை பேணி காக்கவும், போதைப்பொருளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார். புதிய தலைமைச் செயலகம் குறித்து ஒவ்வொருவரும் கருத்து தெரிவிப்பது இயல்பானது. திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க முயற்சிக்கப்பட்டது, அது தற்போது சிறந்த மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு முதலமைச்சரும் சிறந்த தலைமைச் செயலகத்தை கொண்டு வர முயற்சிப்பது வழக்கம். கர்நாடகத்தில் கட்டப்பட்ட சட்டமன்றம் இன்றும் வரலாற்றை படைத்து வருகிறது. சட்டமன்றம் கட்டுவதற்கு செலவுகள் அதிகமாக இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் அவை தேவைப்படுகின்றன என்று அவர் விளக்கம் அளித்தார்.

110 விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடுவது நடைமுறையில் இருந்து வருகிறது. முதலமைச்சர் சிலவற்றை 110 விதியில் அறிவிப்பது தவறானது அல்ல என்று செங்கோட்டையன் தெரிவித்தார். தவெக ஆட்சி ஐந்து ஆண்டு நிலைக்காது என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு பதிலளித்த அவர், “அப்படி சொல்லிக் கொண்டிருந்த காரணத்தால்தான் அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது” என்றார்.

பிரதமர் வேட்பாளராக முதலமைச்சர் விஜய் தவெகவினரால் முன் நிறுத்தப்படுகிறாரா என்ற கேள்விக்கு, “எங்களைப் பொறுத்தவரை, தலைவரை பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார். தமிழகம் அவரை நம்பி வாக்களித்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறோம். இரண்டு மாதத்தில் புதிய சின்னம் பெற்று வெற்றி பெற்றுள்ளோம்” என்று அவர் கூறினார்.

தமிழ்நாட்டு மக்களை காப்பதற்காக தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். மக்கள் விரும்பும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் செங்கோட்டையன் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க : ராகுல் காந்தி பிரதமராக வேண்டும்.. தொல். திருமாவளவன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com