வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் மறைவு.. யார் இந்த சர் கார்பீல்ட் சோபர்ஸ்!

Sobers Passes Away : வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் ஜாம்பவானும், உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவருமான சர் கார்பீல்ட் சோபர்ஸ், 89 வயதில் காலமானார்.

Published on: July 18, 2026 at 1:06 pm

பிரிட்ஜ்டவுன் (பார்படோஸ்), ஜூலை 18 2026: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவருமான சர் கார்பீல்ட் சோபர்ஸ் இன்று (ஜூலை 18) 89 வயதில் காலமானார். அவரது மறைவை மகன் டேனியல் சோபர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது மறைவு செய்தி உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோபர்ஸ், மார்ச் 1954 முதல் ஏப்ரல் 1974 வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 57.78 சராசரியில் 8,032 ரன்கள் குவித்தார். இதில் 26 சதங்கள் மற்றும் 30 அரைசதங்கள் இடம்பெற்றுள்ளன. இடதுகை பேட்ஸ்மேனான அவர், இடதுகை வேக-நடுத்தர பந்துவீச்சாளராகவும் சிறந்து விளங்கி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 235 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியிருந்தாலும், அதில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் அபார திறமையை வெளிப்படுத்திய சோபர்ஸ், கிரிக்கெட் வரலாற்றில் முழுமையான ஆல்-ரவுண்டருக்கான அடையாளமாகவே போற்றப்படுகிறார்.

மேலும், 1968-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக கிளாமோர்கன் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்சருக்கு விளாசிய முதல் முதல் தர (First-Class) கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் சோபர்ஸ் படைத்தார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் கிரிக்கெட் அமைப்புகள், முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : அர்ஜென்டினா vs ஸ்பெயின்.. ஃபிஃபா உலக கோப்பை.. இந்திய ரசிகர்கள் நேரலை பார்ப்பது எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com