தங்கம் விலை மீண்டும் உயர்வு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold Rate Today : சென்னையில் இன்று (ஜூலை 18) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,05,080-ஆகவும், கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.13,135-ஆகவும் விற்பனையாகிறது.

Published on: July 18, 2026 at 12:55 pm

சென்னை, ஜூலை 18, 2026: சென்னையில் இன்று (ஜூலை 18) ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வுடன் பதிவாகியுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.13,135-ஆகவும், சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.1,05,080-ஆகவும் விற்பனையாகிறது.

நேற்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.13,100 மற்றும் சவரனுக்கு ரூ.1,04,800 என்ற விலையில் விற்பனையான நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் கூடுதல் செலவை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, 24 காரட் தூய தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.14,329 ஆகவும், சவரனுக்கு ரூ.1,14,632 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் தங்க விலையை தொடர்ந்து பாதித்து வருகின்றன.

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனையாகிறது. நேற்றும் இதே விலையே நிலவியதால், வெள்ளி விலை தொடர்ந்து மாற்றமின்றி நீடித்து வருகிறது.

இதையும் படிங்க : இந்தியாவின் நிதி குறியீடு உயர்வு.. ரிசர்வ் வங்கி தகவல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com