ஃபிஃபா உலக கோப்பை.. நிரப்பகூடிய வாட்டர் கேன் கொண்டு வர அனுமதி இல்லை!

FIFA Bans Refillable Water Bottles : ஃபிஃபா உலக கோப்பை நிகழ்வின் போது, ரசிகர்கள் நிரப்பக்கூடிய (refillable) தண்ணீர் பாட்டில்களை கொண்டு வருவதற்கு தடை விதித்துள்ளது.

Published on: June 6, 2026 at 1:28 pm

துபாய், ஜூன் 6, 2026: ஃபிஃபா, உலகக் கோப்பை போட்டிகளுக்கான அரங்குகளில் ரசிகர்கள் தங்களுடன் நிரப்பக்கூடிய (refillable) தண்ணீர் பாட்டில்களை கொண்டு வருவதற்கு தடை விதித்துள்ளது.

இது குறித்து, ஃபிஃபா தரப்பில் கூறுகையில், ஏற்கனவே 16 அரங்குகளில் சில, ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களை கொண்டு வருவதற்கு தடை விதித்திருந்ததால், இப்போது அந்தக் கொள்கை அனைத்துப் போட்டி அரங்குகளிலும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்படும்.

இதன் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒரே மாதிரியாக இருக்கும். இந்தத் தீர்மானம், ரசிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரங்குகளுக்குள் அனுமதிக்கப்படும் பொருட்கள் குறித்து தெளிவான விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதாகவும் ஃபிஃபா விளக்கியுள்ளது.

இதுமட்டுமின்றி, ரசிகர்கள் தண்ணீர் அருந்துவதற்கான வசதிகள் அரங்குகளுக்குள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை போட்டிகளுக்கான ரசிகர்கள் அனுபவம் பாதுகாப்பானதும் சீரானதுமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக, நிரப்பகூடிய பாட்டில்கள் தடை செய்யப்படுவது அவசியமான நடவடிக்கை என ஃபிஃபா வலியுறுத்தியுள்ளது. இதனால், ரசிகர்கள் அரங்குகளுக்குள் நுழையும் போது பாதுகாப்பு சோதனைகள் எளிதாக நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நார்வே சதுரங்கத்தில் வெற்றி.. முதல் இந்தியர்.. வரலாறு படைத்த பிரக்ஞானந்தா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com