Kanimozhi Slams CM Vijay : தமிழ்நாட்டில் குற்றச் செயல்கள் தொடர்கின்றன; பெண்கள் பீதியில் இருக்கிறார்கள் என தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
Kanimozhi Slams CM Vijay : தமிழ்நாட்டில் குற்றச் செயல்கள் தொடர்கின்றன; பெண்கள் பீதியில் இருக்கிறார்கள் என தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

Published on: June 4, 2026 at 4:08 pm
Updated on: June 4, 2026 at 4:09 pm
சென்னை, ஜூன் 4, 2026: தமிழ்நாட்டில் குற்றச் செயல்கள் தொடர்கின்றன எனக் குற்றஞ்சாட்டியுள்ளார் கனிமொழி.
இது குறித்து அவர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “திருச்சி – கீழப்புலிவார் ரோடு பகுதியில் 14 வயது சிறுமி, கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
தொடரும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களால் தமிழ்நாட்டுப் பெண்கள் பீதியில் உறைந்து போய் இருக்க, எதற்குமே பொறுப்பேற்காத இந்த தவெக அரசு, என்னவானாலும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்ற துணிச்சலில் தான் குற்றவாளிகள் ஊருக்குள் சுற்றித் திரிகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
திருச்சி – கீழப்புலிவார் ரோடு பகுதியில் 14 வயது சிறுமி, கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 4, 2026
தொடரும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களால் தமிழ்நாட்டுப் பெண்கள் பீதியில் உறைந்து போய் இருக்க, எதற்குமே பொறுப்பேற்காத இந்த…
காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள், என்னவானாலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து விளக்கமளிக்கப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. குறைந்தபட்சம் துறைசார் அதிகாரிகளாவது மக்கள் முன் விளக்கமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் போட்டி? அப்பாவு விருப்பம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com