Defence Stocks : இந்தியாவில் பாதுகாப்பு பங்குகள் 57 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளன.
Defence Stocks : இந்தியாவில் பாதுகாப்பு பங்குகள் 57 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளன.

Published on: June 4, 2026 at 12:27 pm
மும்பை, ஜூன் 4, 2026: இந்தியாவின் பாதுகாப்புத் துறை பங்குகள் கடந்த 5 ஆண்டுகளில் 57% வளர்ச்சி கண்டுள்ளன. எனினும், அடுத்த பெரிய வெற்றியாளர்கள் ஆயுதங்களை உருவாக்கும் நிறுவனங்கள் அல்ல, மாறாக மேம்பட்ட உலோகங்கள் மற்றும் சிறப்பு அலாய் தயாரிக்கும் நிறுவனங்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை பங்குகள் கடந்த சில ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வருமானத்தை அளித்துள்ளன. நிஃப்டி இந்தியா டிஃபென்ஸ் இன்டெக்ஸ் கடந்த 5 ஆண்டுகளில் வருடாந்திர 57% வருமானத்தை வழங்கியுள்ளது.
ஆனால், எல்லா நிறுவனங்களும் போர் விமானங்கள், ஏவுகணைகள் அல்லது கப்பல்கள் தயாரிப்பதில் ஈடுபடவில்லை. சில நிறுவனங்கள், பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைக்கு தேவையான டைட்டானியம், சூப்பர் அலாய், சிறப்பு எஃகு போன்ற முக்கிய பொருட்களை வழங்குகின்றன.
இந்தியாவின் ஆத்மநிர்பர் முயற்சியின் கீழ், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணு ஆற்றல் துறைகளில் உள்ளூர் உற்பத்தி அதிகரிக்கப்படுகிறது. இதனால், மேம்பட்ட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நீண்டகால தேவை உருவாகிறது.
குறிப்பாக இதில், மிதானி (MIDHANI) (Mishra Dhatu Nigam Ltd.) மற்றும் பி.டிசி இன்டஸ்ட்ரீஸ் (PTC Industries) ஆகியவை இந்த துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மிதானியை பொறுத்தவரை 1973-இல் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டு, டைட்டானியம் அலாய், சூப்பர் அலாய், சிறப்பு எஃகு போன்றவற்றை தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் 10 வகை சூப்பர் அலாய் தயாரிப்புகள் NADCAP மற்றும் CEMILAC சான்றிதழ் பெற்றவை, இது பாதுகாப்பு மற்றும் விண்வெளி திட்டங்களுக்கு வழங்குவதற்கான முக்கிய தகுதியாக விளங்குகின்றன.
இதனால், பாதுகாப்புத் துறை பங்குகளில் அடுத்த பெரிய வெற்றியாளர்கள் ஆயுத உற்பத்தியாளர்கள் அல்ல, மாறாக மேம்பட்ட பொருட்கள் மற்றும் அலாய் தயாரிப்பாளர்கள் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : இறால், மீன் உள்ளிட்ட கடல் சார் ஏற்றுமதி.. புதிய உச்சத்தில் இந்தியா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com