திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை.. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்க.. அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss: “திருச்சியில் சிறுமி கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “குற்றச் செயல்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Published on: June 4, 2026 at 11:12 am

சென்னை, ஜூன் 4, 2026: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “திருச்சி காந்தி சந்தை பகுதியில் 15 வயது சிறுமி மகிழுந்தில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது.

சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் மாரியப்பன் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அச்சிறுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக ஆட்சியில் தான் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற அவல நிலை நிலவுகிறது. அதனால் தான் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது. அதன் பிறகும் அதே நிலை தொடரக் கூடாது. பெண்கள் பாதுகாப்புக்காக முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்த சிங்கப்பெண் சிறப்புப் படை உள்ளிட்ட திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : What Point out Annamalai.. அண்ணாமலை புதிய கட்சி உறுதி!

சில்வண்டு சிக்கும், சிறுத்தை சிக்காதுலே.. திருச்சி சூர்யா அரெஸ்ட்.. யூ-ட்யூபர் முக்தார் எங்கே?
Trichy Surya Arrested

சில்வண்டு சிக்கும், சிறுத்தை சிக்காதுலே.. திருச்சி சூர்யா அரெஸ்ட்.. யூ-ட்யூபர் முக்தார் எங்கே?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com