கழன்று ஓடிய விமானத்தின் முன்சக்கரம்.. திக் திக்.. 2 குழந்தைகள் உட்பட 133 பயணிகள் உயிர்பிழைப்பு!

Air India Express plane crash: தாய்லாந்தில் தரையிறகும் போது முன்சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது.

Published on: March 11, 2026 at 5:36 pm

பாங்காக், மார்ச் 11 2026: ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 மேக்ஸ் 8 விமானம், இன்று காலை 6:42 மணியளவில் 133 பயணிகளுடன் தாய்லாந்து சென்றது. தாய்லாந்து, புக்கெட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது முன்பக்க சக்கரத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் தரையிறங்கும்போது விமானம் பலமாக மோதியதில் விமானத்தின் முன் சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 133 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

விமானத்தின் முன்பக்க சக்கரம் உடைந்துள்ளதால், விமானத்தை ஓடுதளத்தில் அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஓடுதளம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தரையிறங்க வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. ஓடுதளத்தின் நிலைமை குறித்து விமான நிலைய அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க; இந்தியாவில் முதன்முறை.. உத்தரப் பிரதேச இளைஞரை கருணைக் கொலை அனுமதி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com