நியூசிலாந்து கோப்பையை வெல்லா விட்டால்.. இந்தப் பட்டம் உங்களுக்கு தான்.. டேல் ஸ்டெயின்!

T20 World Cup 2026: 2026 டி20 உலக கோப்பையை நியூசிலாந்து வெல்லாவிட்டால் ஜோக்கர் என்ற பட்டம் உங்களுக்குத்தான் என தெரிவித்துள்ளார் தென் ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின்.

Published on: March 7, 2026 at 4:31 pm

புதுடெல்லி, மார்ச் 7 2026; 2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது; இதன் இறுதிப்போட்டி, மார்ச் 8-ம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், இந்திய அணியை நியூசிலாந்து எதிர்கொள்கிறது. இந்த நிலையில் போட்டியில் நியூசிலாந்து வெல்லாவிட்டால் அவர்களுக்கு ஜோக்கர் என்ற பட்டம் கிடைக்கும் என தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

வளையொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை நகைச்சுவையாக குறிப்பிட்டார்; தொடர்ந்து பேசிய டேல் ஸ்டெயின் இறுதிப் போட்டியில் அதிக தோல்வியை தழுவியது நியூசிலாந்து தான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் டேல் ஸ்டெயின், “எல்லோரும் தென்னாப்பிரிக்காவை CHOKERS என அழைக்கின்றனர். ஆனால் நியூசிலாந்து ஒருமுறை கூட உலக கோப்பையை வெல்லவில்லை.
எங்களை விட அவர்கள்தான் அதிகமுறை இறுதி போட்டியில் விளையாடி தோல்வியை தழுவி இருக்கிறார்கள் என்றார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் உடனான
யூடியூப் உரையாடலில் வீரர் டேல் ஸ்டெயின் இவ்வாறு குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; மும்பை சிவாஜி பார்க்கில் கிரிக்கெட் ஆடிய ரோகித் சர்மா.. திருவிழா போல் குவிந்த ரசிகர்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com