Assembly Election 2026: தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகம் இரண்டாம் இடம் பிடிக்கும் என்கிறார் காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி.
Assembly Election 2026: தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகம் இரண்டாம் இடம் பிடிக்கும் என்கிறார் காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி.

Published on: March 7, 2026 at 11:05 am
சென்னை மார்ச் 7 2026: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் இரண்டாம் இடம் பிடிக்கும் என கணித்துள்ளார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி. கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்ட நிலையில், ஜோதிமணியின் இந்த பேச்சு வைரல் ஆகி உள்ளது.
இதுகுறித்து பேசிய ஜோதிமணி எம்பி, ‘ தமிழ்நாட்டில் அதிமுக பாரதிய ஜனதா கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள்; தமிழக வெற்றி கழகம் தான் இரண்டாம் இடம் பிடிக்கும்” என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு வாரங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கடைசி நேரத்தில் திமுகவுடன் இணைந்து கொண்டது.
முதலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றெல்லாம் பேசிய காங்கிரஸ் தற்போது எந்த பேச்சுமின்றி திமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த சில காங்கிரஸ் நிர்வாகிகளில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் கரூர் எம்பி ஜோதிமணி ஆகியோர் முக்கியமானவர்கள். தற்போது இவர்கள் அது தொடர்பாக எதுவும் பேசாமல் மௌனமாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; http://அண்ணா பல்கலை., ஆரம்பாக்கம், கோவை நிகழ்வுகள் இல்லாத தமிழகம் உருவாகும் நாள் தான் உண்மையான மகளிர் நாள்.. மருத்துவர் அன்புமணி ராமதாஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com