பாதுகாப்பு ஆய்வாளர் மரூஃப் ரஸா மறைவு.. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

Maroof Raza Passes Away : பாதுகாப்பு ஆய்வாளர் மரூஃப் ரஸா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Published on: February 27, 2026 at 5:49 pm

புதுடெல்லி, பிப்.27, 2026: பாதுகாப்பு ஆய்வாளர் மரூஃப் ரஸா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி, “மரூஃப் ரஸா பத்திரிகைத்துறைக்கு சிறப்பான பங்களிப்பு செய்தார்; உள்நாட்டுப் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய விவகாரங்களில் அவரது ஆழமான புரிதல் பொதுக் கலந்துரையாடலை வளப்படுத்தியது” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மரூஃப் ரஸாவின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது இரங்கலை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மரூஃப் ரஸா அவர்கள் இந்திய இராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியவர். பின்னர் பாதுகாப்பு ஆய்வாளர், எழுத்தாளர், ஊடக விமர்சகர் எனப் பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தினார். முன்னதாக இவர், 1980-ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றினார்.
தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் மூலோபாய விவகார நிபுணராக பணியாற்றினார். இந்தியா–பாகிஸ்தான் உறவுகள், தேசிய பாதுகாப்பு, எதிர்-கிளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி கருத்து தெரிவித்தார்.

இந்தியாவின் பாதுகாப்பு சவால்கள் குறித்து பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விரிவுரைகள் வழங்கி, பாதுகாப்பு மற்றும் மூலோபாய விவகாரங்களில் பொதுக் கலந்துரையாடலை வளப்படுத்தினார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: கேரளா கேரளம் என பெயர் திருத்தம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com