கில்லி VS துணிவு.. ரீ-ரிலீஸ் பாக்ஸ் ஆப்பில் யார் முன்னணி?

Ghilli vs thunivu re release: விஜய்யின் கில்லி படத்துக்கும் அஜித்தின் துணிவு படத்துக்கும் இடையே ரீ-ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸ் மோதல் தமிழ் ரசிகர்களிடம் பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது.

Published on: February 26, 2026 at 2:55 pm

சென்னை, பிப். 26 2026: 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கில்லி படம், அஜித்குமாரின் 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான துணிவு படமும் ரீரிலீஸ் ஆகியுள்ளது அவர்களின் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ரீ-ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸில் கில்லி முன்னிலை வகிக்கிறது.

கில்லி துணிவை ரூ.1.53 கோடி வித்தியாசத்தில் முந்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கில்லி 250 ஸ்க்ரீன்கள் (தமிழ்நாடு+இந்தியா), துணிவு 225 ஸ்க்ரீன்கள் (தமிழ்நாடு மட்டும்) வெளியாகி உள்ளது. விஜய் நடித்த கில்லி படம் முதல் நான்கு நாட்களில் சுமார் ரூ.2.25 கோடி மற்றும் துணிவு அதே நான்கு நாட்களில் தோராயமாக ரூ.45 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: தமிழ் மசாலா பாணி பெல்லாரி ராஜா.. மோகன் லாலை முந்திய மம்முட்டி!

20004 ஆம் ஆண்டு வெளியான கில்லி படத்தில் விஜய், திரிஷா, பிராகாஸ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். எச். வினோத்தின் இயக்கத்தில் வெளியான ‘துனிவு’ திரைப்படம் 2023 பொங்கல் வெளியீட்டின் போது சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அஜித் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், அஜய் மற்றும் வீரா ஆகியோரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். இரு படங்களும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. அடுத்தடுத்த நாட்களில் வசூல் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: நடிகர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும்.. இதில் கவனம்.. தமன்னா எச்சரிக்கை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com