Harry Brook: டி-20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 50 பந்துகளில் சாதனை படைத்தார் ஹாரி.
Harry Brook: டி-20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 50 பந்துகளில் சாதனை படைத்தார் ஹாரி.

Published on: February 25, 2026 at 1:04 pm
புதுடெல்லி, பிப்.25, 2026: டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த சூப்பர் 8 சுற்றில் ஹாரி ப்ரூக்கின் அசத்தல் சதத்தால் பாகிஸ்தான் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றியை ருசித்தது.
இந்த நிலையில், அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்ற இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதேநேரம், பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சாதனை படைத்த ஹாரி ப்ரூக்
இந்தப் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் புதிய சாதனை படைத்தார். அவர், 2026 டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 50 பந்துகளில் சதமடித்தார். இதன்மூலம் டி20 உலகக்கோப்பையில் சதமடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை படைத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியா அரையிறுதி செல்லுமா? இரண்டு போட்டிகள் வெற்றி பெற்றாலும்.. இப்படி ஓர் சிக்கலா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com