Mitsubishi: மிட்சுபிஷி நிறுவனம், திருவள்ளூரில் ₹2,100 கோடி மதிப்பிலான உற்பத்தி நிலையத்தை திறந்துள்ளது.
Mitsubishi: மிட்சுபிஷி நிறுவனம், திருவள்ளூரில் ₹2,100 கோடி மதிப்பிலான உற்பத்தி நிலையத்தை திறந்துள்ளது.

Published on: February 7, 2026 at 3:42 pm
Updated on: February 7, 2026 at 3:50 pm
சென்னை, பிப்.7, 2026: மிட்சுபிஷி திருவள்ளூரில் ₹2,100 கோடி மதிப்பிலான உற்பத்தி நிலையத்தை திறந்துள்ளது. இந்த திட்டத்திற்கான அடிக்கல் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் நாட்டப்பட்டது. இந்த நிலையில், புதிய உற்பத்தி நிலையம் திருவள்ளூரில் தொடங்கப்பட்டுள்ளது. மிட்சுபிஷியின் இந்த முதலீடு, மாநிலத்தில் தொழில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் பெரும் பங்களிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.2,091 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட இந்த வசதி, 2,104 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது. இதனை, தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் லெள்ளிக்கிழமை (பிப்.6, 2026) திறந்துவைத்தார்.
இந்தியாவில் அறை ஏர் கண்டிஷனருக்கான மிட்சுபிஷி எலக்ட்ரிக்கின் முதல் உற்பத்தி ஆலை இதுவாகும், மேலும் ஒரே இடத்தில் வெளிப்புற அலகுகள், உட்புற அலகுகள் மற்றும் கம்ப்ரசர்களை உற்பத்தி செய்யும் கொண்டுள்ளது.
இந்த நிலையில், இதுவரை, இந்த திட்டத்தில் நிறுவனம் ரூ.1,633 கோடி முதலீடு செய்துள்ளது மற்றும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 629 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.122 முதல் ஐ.பி.ஓ முதலீடு.. இந்த வார புதிய வரவுகள்.. முழு பார்வை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com