ICC: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்தது; இதனால், வங்கதேச அணியின் போட்டிகள் திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICC: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்தது; இதனால், வங்கதேச அணியின் போட்டிகள் திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: January 22, 2026 at 6:31 pm
துபாய், ஜன.22, 2026: வங்கதேச கிரிக்கெட் வாரியம் வைத்திருந்த கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நிராகரித்துள்ளது. இதனால், பங்களாதேஷ் அணியின் போட்டிகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி இந்தியாவில் நடைபெற உள்ளன. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், “இந்தியாவில் நடைபெறும் போட்டி மைதானங்களில் வங்கதேச வீரர்கள், அதிகாரிகள் அல்லது ரசிகர்களின் பாதுகாப்புக்கு எந்த நம்பகமான அச்சுறுத்தலும் இல்லை.
வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) கவலை தெரிவித்ததையடுத்து, இடங்களை மாற்ற வேண்டும் என கோரியதால், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்ற ஐசிசி குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில் போட்டிகளை மாற்றுவது, ஐசிசி நிகழ்வுகளின் புனிதத்தன்மையை பாதிக்கக்கூடும் என்றும், உலகளாவிய நிர்வாக அமைப்பாக இருக்கும் ஐசிசியின் நடுநிலைத்தன்மையை குறைக்கக்கூடும் என்றும் குழு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டி: பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com