Khelo India Winter Games 2026: 2026ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகள் யூனியன் பிரதேசமான லே-வில் தொடங்கின.
Khelo India Winter Games 2026: 2026ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகள் யூனியன் பிரதேசமான லே-வில் தொடங்கின.

Published on: January 21, 2026 at 6:06 pm
லே, ஜன.21, 2026: யூனியன் பிரதேசமான லடாக்கின் லே நகரில் உள்ள என்டிஎஸ் மைதானத்தில் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகள் 2026-இன் ஆறாவது பதிப்பு சிறப்பாக தொடங்கியது. லடாக்கின் லெப்டினன்ட் கவர்னர் கவிந்தர் குப்தா தொடக்க விழாவில் கலந்து கொண்டு, லடாக்கை முன்னணி குளிர்கால விளையாட்டு தலமாக உருவாக்கும் முக்கியமான நிகழ்வை குறித்தார்.
இந்த போட்டிகளில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பங்கேற்கின்றன. 1000 பேர் பங்கேற்பாளர்களில் 472 பேர் விளையாட்டு வீரர்கள் பங்குபெறுகிறார்கள். இதன் தொடக்க விழாவில், லடாக்கின் பல பகுதிகளில் இருந்து வந்த கலைஞர்கள், லடாக்கின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் பல்வகைமையை வெளிப்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகளை வழங்கினார்கள்.
இதையும் படிங்க: இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர்.. யார் இந்த அமீலியா வால்வெர்டே?
மேலும், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை மத்திய அமைச்சர் டாக்டர் மான்சுக் மண்டவியா, லடாக்கின் திறமையை பாராட்டினார். சிவில் மற்றும் காவல் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில், இந்த ஆண்டு முதல் முறையாக ஃபிகர் ஸ்கேட்டிங் (ஒலிம்பிக் விளையாட்டு) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் ஐஸ் ஹாக்கி அணியில், ITBP அணி, ராஜஸ்தானை 6-0 என்ற கணக்கில் வென்றது.
மற்றொரு போட்டியில் லடாக் அணி, தெலங்கானாவை 19-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. லடாக் அணியின் பத்மா தேசால் 5 கோல்கள் அடித்து சிறப்பாக விளங்கினார். ஆண்கள் ஐஸ் ஹாக்கியை பொறுத்தமட்டில், இந்திய இராணுவ அணி, ஹிமாச்சல பிரதேசத்தை 5-1 என்ற கணக்கில் வென்றது.
இதையும் படிங்க: இந்தோனேசியா பேட்மிண்டன் போட்டிகள்.. இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com