Budget 2026-27 Income Tax Expectations: கிரிப்டோ முதலீட்டாளர்கள் வரிவிலக்கு கோரவில்லை, ஆனால் நியாயமான வரி முறையை எதிர்பார்க்கிறார்கள். மேலும், வீட்டுக் கடன் வரிச் சலுகைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.
Budget 2026-27 Income Tax Expectations: கிரிப்டோ முதலீட்டாளர்கள் வரிவிலக்கு கோரவில்லை, ஆனால் நியாயமான வரி முறையை எதிர்பார்க்கிறார்கள். மேலும், வீட்டுக் கடன் வரிச் சலுகைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.

Published on: January 21, 2026 at 4:04 pm
சென்னை, ஜன.21, 2026: வரவிருக்கும் மத்திய பட்ஜெட் 2026-ஐ முன்னிட்டு, வரி செலுத்துவோர் புதிய வரி முறையில் வீட்டு கடன் வட்டி, சுகாதார காப்பீடு போன்ற சலுகைகள் வழங்கப்படுமா என ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ₹12 லட்சம் வருமானம் வரி விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு, புதிய வரி முறையில் மேலும் சலுகைகள் வழங்கப்படுமா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.
இதற்கிடையில், வரி படிகளும் (Income Tax Slabs) மாற்றப்பட வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது. இதில், குறிப்பாக விலக்கு வரம்பு உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பழைய வரி முறை (Old Tax Regime) முற்றிலும் நீக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில், இத்தகைய மாற்றங்கள், குறிப்பாக சம்பளத்தாரர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதையும் படிங்க: இந்திய மாநிலங்களில் 66 பில்லியன் டாலர் முதலீடு.. அதானி மெகா திட்டம்!
தொடர்ந்து ஓர் ஆய்வறிக்கையில் கிரிப்டோ முதலீட்டாளர்கள் வரிவிலக்கு கோரவில்லை, ஆனால் நியாயமான வரி முறையை எதிர்பார்க்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கோயின்ஸ்விட்ச் இணை நிறுவனர் அஷிஷ் சிங்கால் கூறுகையில், “இந்த ஆய்வு, முதலீட்டாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள், சட்டப்படி இணங்கத் தயாராக இருக்கிறார்கள், மேலும் நியாயமான மற்றும் கணிக்கக்கூடிய வரி அமைப்பை எதிர்பார்க்கிறார்கள் என்பதை காட்டுகிறது.
வரவிருக்கும் ஒன்றிய பட்ஜெட்டில், கிரிப்டோ வரி முறையை நியாயப்படுத்தி, தெளிவான ஒழுங்குமுறைகளை வழங்குவது, சட்டப்படி உள்ளூர் பங்கேற்பை ஊக்குவிக்கும். இது வெளிப்படையான மற்றும் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட டிஜிட்டல் சொத்து சூழலை உருவாக்க உதவும்.” என்றார். இந்நிலையில், பட்ஜெட் 2026-இல், வரி செலுத்துவோருக்கு புதிய சலுகைகள், அதிக விலக்கு வரம்பு, மற்றும் பழைய வரி முறையின் நிலை குறித்து முக்கிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆப்பிள் இறக்குமதிக்கு 100% சுங்கவரி.. இமாச்சல் முதலமைச்சர் கோரிக்கை ஏன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com