Gold Rate Today: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ. 13,610 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Gold Rate Today: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ. 13,610 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Published on: January 20, 2026 at 3:44 pm
சென்னை, ஜன. 20 2026: சென்னையில் இன்று (செவ்வாய் கிழமை) 24 காரட் தூயத் தங்கத்தின் விலை கிராம் ரூ.14 ஆயிரத்து 847 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கம் ரூபாய் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 776 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
22 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 13,610 என நிர்ணயிக்கப்பட்டு, 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கம் விலை ரூபாய் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 880 என காணப்படுகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று கிராமுக்கு ரூ. 160 உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ. 1280 உயர்ந்துள்ளது.
நேற்று (ஜன.19 2026) கிராம் ரூ. 13,450 ஆகவும், சவரன் ரூபாய் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 880 என காணப்பட்டது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தமட்டில் கிராம் ரூ.330 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு கிலோ வெள்ளி ரூ. 3 லட்சத்து 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
வெள்ளியை பொருத்தமட்டில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ. 12 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ₹10,000 SIP ₹20 லட்சமாக உயர்வு.. இந்த மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமை பாருங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com