Karnataka DGP suspended: கர்நாடக போலீஸ் அதிகாரி ஒருவரின் வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல் பரவிவருகிறது.
Karnataka DGP suspended: கர்நாடக போலீஸ் அதிகாரி ஒருவரின் வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல் பரவிவருகிறது.

Published on: January 20, 2026 at 2:42 pm
பெங்களூரு, ஜன.20, 2026: கர்நாடக அரசு, மூத்த ஐபிஎஸ் அதிகாரியான கே. ராமச்சந்திர ராவை திங்கட்கிழமை (ஜன.19, 2026) உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது. தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் அவர் அவதூறு செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வீடியோக்கள் பரவியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையில், மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா, விசாரணை முடிவின் அடிப்படையில் ராவை பணி நீக்கம் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அரசின் உத்தரவில் அதிகாரியின் நடத்தை அரசு ஊழியருக்குப் பொருந்தாதது என்றும், அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரி மறுப்பு
இதற்கிடையில், ராமச்சந்திர ராவ், குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்து, அந்த வீடியோ போலியானது என்றும், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இது குறித்து அவர், “நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். இது அனைத்தும் கற்பனை, பொய். வீடியோ முழுவதும் போலியானது. எனக்கு இதைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் சித்தராமையா விசாரணைக்கு உத்தரவு
இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஐபிஎஸ் அதிகாரி கே. ராமச்சந்திர ராவைச் சுற்றியுள்ள விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து சித்த ராமையா, “இதற்கு விசாரணை நடத்தப்படும். இன்று காலை தான் எனக்கு தகவல் கிடைத்தது. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். எவரும் சட்டத்திற்கு மேல் இல்லை; அதிகாரியின் மூத்த நிலைமை நடவடிக்கைக்கு தடையாக இருக்காது,” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வீடியோ பரவியதைத் தொடர்ந்து, மாநில அரசு ராவை இடைநீக்கம் செய்து, மேலதிக விசாரணை நடைபெறும் வரை பணியிலிருந்து விலக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜி ராம் ஜி.. மக்களை தவறாக வழி நடத்துவதா? காங்கிரஸூக்கு சௌஹான் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com